Tnpsc Psychologist Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil & General Studies in Tamil
PSYCHOLOGIST (IN PRISONS AND CORRECTIONAL SERVICES DEPARTMENT) IN TAMIL NADU JAIL SERVICES
1. “ஐ”, “ஒள” என்ற எழுத்துக்களின் இன எழுத்துகளைக் கண்டறிக
(அ) அ,இ (ஆ) இ,உ (இ) ஈ,ஓ (ஈ) அய்,அவ்
2. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக:
கரை கறை
அ. கரைதல் அறை
ஆ. ஓரம் அழுக்கு
இ. புரை பறை
ஈ. முதலை முதல்
3. சரியான நிறுத்தற் குறிகளைக் கண்டறிக:
(அ) “பாரத ஸ்டேட் வங்கி” “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.
(ஆ) பாரத ஸ்டேட் வங்கி, “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.
(இ) பாரத, ஸ்டேட் வங்கி “இலா” என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.
(ஈ) “பாரத ஸ்டேட் வங்கி” இலா என்னும் மென்பொருளை உருவாக்கியிருக்கிறது.
4. ஊர்ப் பெயர்களின் மரூஉவைக் கண்டுபிடிக்க:
தஞ்சாவூரின் மரூஉவைக் கண்டுபிடிக்க
(அ) சோணாடு (ஆ) பழையாறை (இ) தென்னாடு (ஈ) தஞ்சை
5. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:
(அ) ஆடு அலப்பும் (ஆ) மயில் கூவும் (இ) நரி ஊளையிடும் (ஈ) நாய் கத்தும்
6. சொல்லைப் பிரித்துப் பொருந்தாத தொடரை அறிக:
கானடை
(அ) கான் + அடை – காட்டைச்சேர் (ஆ) கான் + நடை – காட்டுக்கு நடத்தல்
(இ) கால் + நடை – விலங்குகள் (ஈ) கால் + நடை – காலால் நடத்தல்
7. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க:
கேட்டார்
(அ) கேட் (ஆ) கேட்ட (இ) கேட்டு (ஈ) கேள்
8. வேர்ச்சொல்லை தேர்வு செய்தல்:
எழுதுகிறாள்
(அ) எழுதுகின்றார் (ஆ) எழுதுவாள் (இ) எழுது (ஈ) எழுதுகின்றாள்
9. தாமரை தன் தோழியுடன் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கடை வீதிக்குச் சென்றாள்
– இவ்வாக்கியத்துக்கு பொருத்தமற்ற வினாச்சொல் இடம்பெற்றுள்ள தொடரைச் சுட்டுக:
(அ) தாமரை எங்குச்சென்றாள்? (ஆ) தாமரை எப்படிச் சென்றாள்?
(இ) தாமரையுடன் சென்றது யார்? (ஈ) தாமரை எப்பொழுதுச் சென்றாள்?
10. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) பைந்தமிழ், பெருவெடிப்பு, பீடு, பேரண்டம் (ஆ) பீடு, பெருவெடிப்பு, பேரண்டம், பைந்தமிழ்
(இ) பேரண்டம், பைந்தமிழ், பெருவெடிப்பு, பீடு (ஈ) பெருவெடிப்பு, பீடு, பேரண்டம், பைந்தமிழ்
11. சொற்களை இணைத்து புதியசொல் உருவாக்கல்:
“பூ” என்ற சொல்லோடு இணையாத சொல்லைக் கண்டறிக:
(அ) மாலை (ஆ) மணி (இ) விலங்கு (ஈ) குண்டுமணி
12. கீழ்கண்ட வாக்கியங்களில் பேச்சு வழக்கில் அமைந்துள்ள வாக்கியத்தைக் கண்டறிக:
(அ) தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
(ஆ) தமிழ் முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளாக்கப்பட்டது
(இ) தமிழ் ஐம்பெருங்காப்பியங்கள அணிகலன்களாகப் பெற்றது
(ஈ) தமிழ் படிச்சவங்களால் வளர்க்கப்பட்டது
13. சரியான வினாச் சொல் எது?
மனப்பாடச் செய்யுளைப் படித்தாயா?
(அ) அறியாவினா (ஆ) கொடைவினா (இ) அறிவினா (ஈ) ஏவல்வினா
14. காண்பான் – கீழ்க்கண்டவற்றுள் எது சரி?
(அ) நடந்து முடிந்தசெயலைக் குறிப்பது (ஆ) நடந்த செயலைக் குறிப்பது
(இ) நடக்கவிருக்கும் செயலைக் குறிப்பது (ஈ) நடக்கும் செயலைக் குறிப்பது
15. கிறு,கின்று, ஆநின்று – எக்காலத்திற்கு உரிய இடைநிலைகள்?
(அ) எதிர்கால இடைநிலைகள் (ஆ) நிகழ்கால இடைநிலைகள்
(இ) இறந்தகால இடைநிலைகள் (ஈ) எதிர்மறை இடைநிலைகள்
16. விடைக்கேற்ற வினாவைக் கண்டறி:
“தென்னாட்டுப் பெர்னாட்ஷா” என்ற அறிஞர் அண்ணா புகழப்படுகிறார்
(அ) அறிஞர் அண்ணா எவ்வாறு புகழப்படுகிறார்?
(ஆ) அறிஞர் அண்ணா தென்னாட்டுப் பெர்னாட்ஷா என ஏன் புகழப்படுகிறார்
(இ) பெர்னாட்ஷா யார்?
(ஈ) பெர்னாட்ஷா எவ்வாறு புகழப்படுகிறார்?
17. சரியான இணையைத் தேர்ந்தெடு
(அ) அலை-கடலலை (ஆ) அளை-வரவழை (இ) அழை-நண்டு (ஈ) அனை-கூப்பிடு
18. சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான சொற்றொடரைத் தேர்க:
(அ) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு ஐந்து பாடலிலும் கருத்துகள் இடம் பெற்றுள்ளன
(ஆ) சிறுபஞ்சமூலத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன
(இ) ஒவ்வொரு பாடலிலும் ஐந்து கருத்துகள் சிறுபஞ்சமூலத்தின் இடம் பெற்றுள்ளன.
(ஈ) ஒவ்வொரு ஐந்து பாடலிலும் சிறுபஞ்சமூலம் இடம் பெற்றுள்ளன.
19. ஊர்ப்பெயர்களின் மரூஉ:
சரியான இணையைத் தெரிவு செய்க:
(அ) கோயம்புத்தூர்-கோவைபுதூர் (ஆ) புதுச்சேரி-புதுவை
(இ) கும்பகோணம்-கும்பை (ஈ) திருநெல்வேலி-நெய்வேலி
20. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக:
(அ) மாமல்லபுரம்-மயிலை (ஆ) செங்கல்பட்டு-செஞ்சி
(இ) உதகமண்டலம்-உதகை (ஈ) புதுச்சேரி-புதுகை
21. இணையான தமிழ்ச் சொல்லைக் கண்டறிக:
“வெயிட்”
(அ) எடை (ஆ) நிறை (இ) பருமன் (ஈ) தராசு
22. பிறமொழிச் (ஆங்கிலச்) சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொல்:
பேங்க் (BANK)
(அ) பெட்டகம் (ஆ) இணையதள வணிகம் (இ) வணிக வளாகம் (ஈ) வங்கி
23. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைப் பொருத்துக:
அ. Aesthetis 1. தொன்மம்
ஆ. Artifacts 2. கலைச்சொல்
இ. Terminology 3. கலைப்படைப்புகள்
ஈ. Myth 4. அழகியல்
அ ஆ இ ஈ
அ. 2 3 4 1
ஆ. 4 2 3 1
இ. 1 3 4 2
ஈ. 4 3 2 1
24. விடை வகைகள்:
“விளையாட்டு மைதானம் எங்குள்ளது?” என்ற வினாவிற்கு “இப்பக்கத்தில் உள்ளது” என உரைப்பது
(அ) ஏவல் விடை (ஆ) மறை விடை (இ) நேர் விடை (ஈ) சுட்டு விடை
25. பொருத்தமான காலம் அமைத்தல்:
சரியான தொடரைத் தேர்ந்தெடு:
(அ) கண்ணனைப் பார்த்தேன் (நிகழ்காலம்) (ஆ) கண்ணனைப் பார்க்கப் போகிறேன் (எதிர்காலம்)
(இ) கண்ணனைப் பார்க்கிறேன் (இறந்தகாலம்) (ஈ) கண்ணனைப் பார்ப்பேன் (எதிர்காலம்)
26. சொற்களை இணைத்துப் புதிய சொற்கள் அமைக்க:
குருவி, கொய்யா, சோறு, பழம், போட்டி
(அ) குருவி போட்டி (ஆ) கொய்யா சோறு (இ) சோறு போட்டி (ஈ) கொய்யாப் பழம்
27. பேச்சு வழக்கில் இருந்து எழுத்து வழக்காக மாற்றுக:
இப்ப எனக்குப் புரிஞ்சு போச்சு. நீயும் புரிஞ்சுக்கோ
(இ) இப்பொழுது எனக்கு புரிஞ்சுது. நீயும் புரிஞ்சுக்க
(ஆ) இப்பொழுது எனக்கு புரிந்துவிட்டது. நீயும் புரிந்துகொள்
(இ) இப்போ எனக்கு புரிஞ்சுருச்சு. நீயும் புரிந்துகொள்
(ஈ) இப்ப எனக்கு புரிந்துவிட்டது. நீயும் புரிஞ்சுக்க
28. சரியான “அகர” வரிசையைத் தேர்ந்தெடு:
(அ) தூசும், துகிரும், ஆரமும், அகிலும், முத்தும், மணியும்
(ஆ) தூசும், துகிரும், முத்தும், மணியும், அகிலும், ஆரமும்
(இ) அகிலும், ஆரமும், துகிரும், முத்தும், தூசும், மணியும்
(ஈ) அகிலும், ஆரமும், துகிரும், தூசும், மணியும், முத்தும்
29. தொடரின் வகையைக் கண்டறிக:
அவன் திருந்தினான்
(அ) பிறவினைத் தொடர் (ஆ) கட்டளைத் தொடர் (இ) தன்வினைத் தொடர் (ஈ) செய்தித் தொடர்
30. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் ————- பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்
(அ) மேலும் (ஆ) ஆகையால் (இ) ஏனெனில் (ஈ) அதனால்
31. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது
– இத்தொடருக்கு ஏற்ற வினா அதை;திடுக:
(அ) மழை ஏன் வெள்ளத்தில் மூழ்கியது? (ஆ) வெள்ளம் ஏன் மழையில் மூழ்கியது?
(இ) மழையு; வெள்ளமும் ஏன் புவியில் மூழ்கியது (ஈ) புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?
32. பிரித்தெழுதுதல்:
“வெண்குடை” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) வெண் + குடை (ஆ) வெண்மை + குடை
(இ) வெம் + குடை (ஈ) வெம்மை + குடை
33. சேர்த்தெழுதுதல்:
நிலவு + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்
(அ) நிலயென்று (ஆ) நிலவென்று (இ) நிலவன்று (ஈ) நிலவுஎன்று
34. உவமைக்கேற்ற பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
நெல்லிக்காய் மூட்டையைக் கொட்டினாற்போல
(அ) ஒற்றுமை (ஆ) நட்பு (இ) ஒற்றுமையின்மை (ஈ) பகைமை
35. வினைமுற்றுக்குரிய வேர்ச்சொல்லை எழுதுக:
பயின்றாள்
(அ) படி (ஆ) பயின்று (இ) பயின்ற (ஈ) பயில்
36. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
சூரியன்
(அ) ஞாயிறு, பரிதி (ஆ) பரிதி, திங்கள் (இ) திங்கள், நிலவு (ஈ) நிலவு, கதிரவன்
37. ஒழுங்குபடுத்தப்பட்ட முறையான தொடரைத் தேர்க:
1. உலகம் தமிழ் மொழி வாழட்டும் உள்ள வரையிலும்.
2. உயிரெழுத்துகள் பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.
3. வென்றதை பகைவரை பாடும் இலக்கியம் ஆகும் பரணி.
4. அம்புவிடும் கலையை ஏகலை என்றது தமிழ்
(அ) 1 மற்றும் 3 (ஆ) 2 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 3 மற்றும் 4
38. பிழையற்ற சரியான தொடரைக் கண்டறிக:
(அ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின (ஆ) தேர்த்திருவிலாவிற்குச் சென்றனர்
(இ) வாழைப்பழம் உடலுக்கு மிகவும் நல்லது (ஈ) இளைக்கு வேறு பெயர் தளை
39. நிறுத்தற்குறியிட்ட சரியான தொடரைத் தேர்ந்தெடு:
(அ) 11வது வயதிலேயே, அரசவையில் கவிதை எழுதி பாரதி என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்
(ஆ) 11வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்
(இ) 11வது வயதிலேயே, அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்
(ஈ) 11வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி “பாரதி” என்னும் பட்டம் பெற்றார் பாரதியார்
40. சரியான நிறுத்தற்குறியிட்ட வாக்கியத்தைக் கண்டறிக:
(அ) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் போன்றவற்றை இல்லவிழாக்களாக கொண்டாடினர்.
(ஆ) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள், போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்
(இ) திருமணம் : வளைகாப்பு : பிறந்தநாள், போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்
(ஈ) திருமணம், வளைகாப்பு, பிறந்தநாள் போன்றவற்றை இல்ல விழாக்களாக கொண்டாடினர்
41. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:
கிளி
(அ) தத்தை, கிள்ளை (ஆ) உயிர், உண்மை
(இ) வாய்மை, பொய்மை (ஈ) கண், உண்மை
42. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிக:
(அ) மூவேந்தர் 1. இறந்த, நிகழ், எதிர்
(ஆ) முக்கனி 2. சேரர், சோழர், பாண்டியர்
(இ) முத்தமிழ் 3. மா, பலா, வாழை
(ஈ) முக்காலம் 4. இயல், இசை, நாடகம்
அ ஆ இ ஈ
அ. 4 1 2 3
ஆ. 2 3 4 1
இ. 2 1 4 3
ஈ. 3 2 4 1
43. தமிழ்ச்சொல் அறிக:
ப்ரௌசர் (Browser) என்ற ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச் சொல் எது?
(அ) சுட்டி (ஆ) உலவி (இ) செதுக்கி (ஈ) கணினி
44. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தெரிக:
Cutural Values
(அ) கலை விழா (ஆ) கலாச்சாரப் பெருமை
(இ) பண்பாட்டு எல்லை (ஈ) பண்பாட்டு விழுமியங்கள்
45. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:
புலி
(அ) குட்டி (ஆ) குருளை (இ) பறழ் (ஈ) கன்று
46. சொல்லத்தகாத சொற்களை மறைத்துக் கூறுவது
(அ) மரபு (ஆ) குழுஉக்குறி (இ) மரூஉ (ஈ) இடக்கர் அடக்கல்
47. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
(அ) தொன்மை, தேங்காய், தௌவை, தோழன் (ஆ) தொன்மை, தௌவை, தோழன், தேங்காய்
(இ) தேங்காய், தொன்மை, தோழன், தௌவை (ஈ) தேங்காய், தௌவை, தோழன், தொன்மை
48. “கேள்” என்ற வேர்ச்சொல்லின் வினைமுற்று கண்டறிக:
(அ) கேட்ட (ஆ) கேட்டான் (இ) கேட்டு (ஈ) கேட்டல்
49. வேர்ச்சொல்லின் எதிர்மறை தொழிற்பெயரைக் காண்க:
“நட”
(அ) நடத்தல் (ஆ) நடந்த (இ) நடவாமை (ஈ) நடந்தவன்
50. சொற்களை ஒழுங்குபடுத்துக:
“காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்”
(அ) இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று வாழ்விற்குரிய
(ஆ) காவிய இன்பத்துறைகளுள் இன்பமும் வாழ்விற்குரிய ஒன்று
(இ) ஒன்று காவிய இன்பமும் வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள்
(ஈ) வாழ்விற்குரிய இன்பத்துறைகளுள் காவிய இன்பமும் ஒன்று
51. சந்திப் பிழை அற்ற வாக்கியங்களைக் கண்டறிக:
1. மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.
2. மாட்டை தழுவும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும்.
3. தமிழ் மக்களின் வீரத்தை சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
4. தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது புலி ஆட்டமாகும்.
(அ) 1 மற்றும் 2 (ஆ) 1 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 3 மற்றும் 4
52. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றுக:
ஊட்டமிகு உணவு உண்டார் – அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.
(அ) ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
(ஆ) ஊட்டமிகு உணவு உண்டதால் அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
(இ) ஊட்டமிகு உணவு உண்டு அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
(ஈ) ஊட்டமிகு உணவால் அவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்
53. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:
(அ) கர்நாடகம் (ஆ) கேரளா (இ) இலங்கை (ஈ) ஆந்திரா
54. எதிர்ச்சொற்களை பொருத்துக:
1. எளிது – புரவலர்
2. ஈதல் – அரிது
3. அந்நியர் – ஏற்றல்
4. இரவலர் – உறவினர்
(அ) 2,1,4,3 (ஆ) 3,4,1,2 (இ) 2,3,4,1 (ஈ) 3,4,2,1
55. “புதுமணல்” என்பதன் எதிர்ச்சொல் எழுதுக:
(அ) புதுமை மணல் (ஆ) புதிய மணல் (இ) பழமணல் (ஈ) பூமணல்
56. எதிர்ச்சொல்லை எழுத்தெழுதுதல்:
இயற்கை:
(அ) வன்மை (ஆ) செயற்கை (இ) செழுமை (ஈ) வலிமை
57. பிரித்து எழுதுக:
“துயின்றிருந்தார்” என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது
(அ) துயின்று + இருந்தார் (ஆ) துயில் + இருந்தார் (இ) துயின்றி + இருந்தார் (ஈ) துயின் + இருந்தார்
58. விடை வகைகள்:
“நீ சாப்பிட வில்லையா?” என்ற வினாவிற்கு “சாப்பிட்டால் தூக்கம் வரும்” என்று உரைப்பது
(அ) இன மொழி விடை (ஆ) உறுவது கூறல் விடை (இ) உற்றது உரைத்தல் விடை (ஈ) நேர்விடை
59. அலுவல் சார்ந்த கலைச்சொற்களை கண்டறிந்து எழுதுக:
ஃபோல்டர் (Folder)
(அ) கோப்பு (ஆ) இழுவை முத்திரை (இ) மை பொதி (ஈ) மடிப்புத்தாள்
60. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்:
தன்வினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:
வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
தோசை வைக்கப்பட்டது
(அ) செயப்பாட்டு வினை (ஆ) தன்வினை (இ) பிறவினை (ஈ) செய்வினை
61. பின்வரும் பத்தியைப் படித்து வினாவிற்கேற்ற விடையளிக்கவும் (61-65):
காமராசரின் வீட்டுக்குள் ஒரு சிறுவனும் அவனுடைய தங்கையும் நுழைய முயன்றனர். ஊழியர் அவர்களைத் தடுப்பதைக் காமராசர் கவனித்தார் உடனே அவர்களை உள்ளே அழைத்தார். யாரைப் பார்க்க வந்தீங்க? என்று அன்புடன் வினவினார். “எங்க அண்ணனுக்குத் தேர்வுக்குப் பணம் கட்ட அம்மாவிடம் வசதியில்லே. உங்களைப் பார்த்தால், என்று சிறுமி கூறி முடிப்பதற்குள் அம்மா அனுப்பி விட்டாரா?” என்று காமராசர் கேட்டார். இல்லை நாங்களாகத்தான் வந்தோம். ஆம்மா அப்பளம் போட்டு வீடு விடாகக் கொண்டு போய் வித்திட்டு வருவாங்க அதில் வரும் வருமானத்தை வச்சுத்தான் எங்களைப் படிக்க வைக்கிறாங்க” என்று குழந்தைகள் கூறினர். அதனைக் கேட்டதும் மாடியேறிச் சென்று பணத்தைக் கொண்டு வந்து கொடுத்தார்.
மறுநாள் குழந்தைகள் இருவரும் காமராசரைத் தேடி வந்தனர். ஐயா தேர்வுக்குப் பணம் கட்டியாச்சு இந்த இந்த இரசீதை (பற்றுச் சீட்டை) அம்மா உங்களிடம் காட்டிட்டு வரச் சொன்னாங்க என்றனர். அதனைக் கேட்டு காமராசர் மனம் நெகிழ்ந்தார்.
61. காமராசரின் வீட்டிற்குள் நுழைய முயன்றவர்கள் யார்?
(அ) பெற்றோர் (ஆ) மக்கள் (இ) சிறுவன்-சிறுமி (ஈ) ஆசிரியர்கள்
62. இந்நிகழ்வு சிறுவனது குடும்பத்தின் எப்பண்பை விளக்குகிறது?
(அ) ஏழ்மை (ஆ) நேர்மை (இ) உழைப்பு (ஈ) கல்லாமை
63. மறுநாள் குழந்தைகள் வந்ததும் காமராசர் மனம் எப்படியிருந்தது?
(அ) மகிழ்ந்தார் (ஆ) நெகிழ்ந்தார் (இ) துன்பப்பட்டார் (ஈ) கோபப்பட்டார்
64. சிறுவனும் சிறுமியும் எதற்காக காமராசரின் வீட்டிற்கு வந்தனர்?
(அ) தேர்வுக்கு பணம் கட்ட (ஆ) புத்தகம் வாங்க (இ) பொருள் வாங்க (ஈ) பேனா வாங்க
65. மறுநாள் குழந்தைகள் எதைக் கொண்டு வந்தனர்?
(அ) இரும்புப்பெட்டி (ஆ) இரசீதை (பற்றுச்சீட்டு) (இ) கடிதம் (ஈ) உணவு
66. ஒருமை பன்மை பிழையற்றதைக் கண்டறிக:
(அ) மேகங்கள் சூழந்து கொண்டது (ஆ) மேகம் சூழ்ந்து கொண்டன
(இ) மேகம் சூழ்ந்து கொண்டது (ஈ) மேகம் சூழந்து கொள்கின்றன
67. கீழ்க்காணும் தொடர்களில் தன்மை ஒருமை தொடரைத் தேர்க:
(அ) நான் அல்லோம் (ஆ) நாம் அல்லோம் (இ) அவன் அல்லன் (ஈ) நான் அல்லேன்
68. ஒருமை, பன்மை பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக:
(அ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை (ஆ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
(இ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்ல (ஈ) மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லேன்
69. தவறான பொருத்தம் எது?
(அ) திங்கள்-மாதம் (ஆ) ஓடு-மேற்கூரை (இ) நகை-மெய்ப்பாடு (ஈ) அரம்-ஆயுதம்
70. சரியான பொருத்தம்:
சொல் பொருள்
அ. யாக்கை காக்கை
ஆ. சேக்கை படுக்கை
இ. பிணித்து பிணி
ஈ. வாய்ந்த வாய்ச்சொல்
71. சொல்லை ஏற்புடைய பொருளுடன் பொருத்துக:
(அ) மயலுறுத்து-சீராக (ஆ) அருகுற-அருகில்
(இ) லயத்துடன்-தீராத (ஈ) மாளாத-மயங்கச்செய்
72. பிழையற்ற தொடரை அறிக:
(அ) செழியன் விளையாட வந்தது (ஆ) கண்ணகி மதுரையை எரித்தான்
(இ) மாடலன் நேற்று வந்தான் (ஈ) செல்வன் பாடங்களைப் படித்து வந்தாள்
73. மரபுச் சொற்களைப் பொருத்துக:
அ. கிளி 1. கூவும்
ஆ. மயில் 2. பேசும்
இ. ஆந்தை 3. அகவும்
ஈ. சேவல் 4. அலறும்
அ ஆ இ ஈ
அ. 2 4 3 1
ஆ. 2 3 4 1
இ. 3 2 1 4
ஈ. 3 1 4 2
74. பண்டைத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கி பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் எது?
(அ) புறநானூறு (ஆ) பழமொழி நானூறு (இ) அகநானூறு (ஈ) பாஞ்சாலி சபதம்
75. “தூது இலக்கியம்” வேறு எந்த பெயரால் அழைக்கப்படுகிறது?
(அ) சிந்து இலக்கியம் (ஆ) சந்து இலக்கியம் (இ) சங்க இலக்கியம் (ஈ) காதல் இலக்கியம்
76. மக்கள் – கூட்டுப்பெயர்:
சரியான எண்ணடையைக் கண்டறிக:
(அ) மக்கள் மந்தை (ஆ) மக்கள் கூட்டம் (இ) மக்கள் திரள் (ஈ) மக்கள் குவியல்
77. பொருத்தமற்ற தொடரை அறிக:
(அ) அவரை கொத்துக் கொத்தாய்க காய்க்கும்
(ஆ) முந்திரி குலை குலையாய்க் காய்க்கும்
(இ) வைக்கோலைக் கற்றை கற்றையாயக் கட்டி வைத்தனர்
(ஈ) மக்கள் குவியல் குவியலாய்த் திரண்டனர்
78. தகுந்த சொல்லைத் தேர்ந்தெடு:
பிறர் நமக்குச் செய்யும் தீங்கைப் பொறுத்துக் கொள்வது———-
(அ) வம்பு (ஆ) அமைதி (இ) அடக்கம் (ஈ) பொறை
79. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்:
———– விலங்கிடம் பழகாதே
(அ) நல்ல (ஆ) பெரிய (இ) இனிய (ஈ) கொடிய
80. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:
Passenger Name Record
(அ) பயணியர் வருகைப் பதிவு (ஆ) பயணியர் முன்பதிவு
(இ) பயணியர் பெயர்ப்பதிவு (ஈ) பயணியர் அவசரப்பதிவு
81. Irrigation – ஏற்ற தமிழ்ச்சொல் கண்டறிக:
(அ) நிலப்பகுதி (ஆ) காப்புரிமை (இ) பாசனம் (ஈ) வயல்
82. ‘Puppetry’ – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
(அ) சிலம்பாட்டம் (ஆ) கோலாட்டம் (இ) பொம்மலாட்டம் (ஈ) கரகாட்டம்
83. கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று: நடுவண் அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த ஆண்டு 2004
காரணம்: உலக மொழிகளில் மூத்தமொழி தமிழ்
(அ) கூற்று தவறு, காரணம் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு
(இ) கூற்று சரி, காரணம் சரி (ஈ) கூற்று தவறு, காரணம் தவறு
84. கூற்று, காரணம் – சரியா? தவறா?
கூற்று: நல்லொழுக்கமே நல்ல மனிதர்களை உருவாக்கும்
காரணம்: நாம் பின்பற்ற வேண்டிய நற்பண்புகளை அற நூல்கள் விளக்குகின்றன.
(அ) கூற்று தவறு, காரணம் சரி (ஆ) கூற்று சரி, காரணம் தவறு
(இ) கூற்று சரி, காரணம் சரி (ஈ) கூற்று தவறு, காரணம் தவறு
85. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:
வனம் வானம்
அ. விசும்பு அரண்
ஆ. கான் விசும்பு
இ. முளி ஆரம்பம்
ஈ. சோலை பொழில்
86. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:
மலை மாலை
அ. மழை வெள்ளம்
ஆ. தொடுதல் விடுதல்
இ. சிகரம் சிறு பொழுது
ஈ. விலங்கு ஓவியம்
87. கீழ்கண்ட சொற்களில் வேகமாக நடத்தல், கூரையாக பயன்படுத்தும் பொருள் என்பதைக் குறிக்கும் சொல்லைக் கண்டறிக:
(அ) வீடு (ஆ) தேடு (இ) நாடு (ஈ) ஓடு
88. இரு பொருள் தருக. ஒரு சொல்லால் நிரப்பு:
மழலை பேசும் —— அழகு.
இனிமைத் தமிழ் ——- எமது
(அ) பேச்சு (ஆ) மொழி (இ) சொல் (ஈ) செப்புதல்
89. இருபொருள் கொண்ட ஒரு சொல்:
நீ அறிந்ததைப் பிறருக்கு ——-
எழுத்துகள் தொடர்ந்து நின்று பொருள் தருவது —-
(அ) சொல் (ஆ) பதம் (இ) வார்த்தை (ஈ) கிளவி
90. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க (அழகாக)
(அ) ஊர்தி ———- சென்றது
(ஆ) காலம் ———– ஓடுகிறது
(இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை ——— காட்டுகிறது
(இ) இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் ——— காட்டு
91. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க: (பெண்ணும்)
(அ) ஆணும் —– சமம் (ஆ) சேவலும் ——— பறவைகள்
(இ) ——– ஆய்ச்சியும் முல்லை நில மக்கள் (ஈ) தந்தை தாயை ———–ஐயை என்பர்
92. சரியான இணைப்புச் சொல் எது?
காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர் ——- அவர் எளிமையை விரும்பியவர்
(அ) மேலும் (ஆ) ஆகையால் (இ) ஏனெனில் (ஈ) எனவே
93. சரியான இணைப்புச் சொல் எது?
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத் திறன் ———- அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.
(அ) அதனால் (ஆ) அதுபோல (இ) ஏனெனில் (ஈ) எனவே
94. உவமைக்கு ஏற்ற பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
“மழைமுகம் காணாப்பயிர் போல”
(அ) ஏக்கம் (ஆ) இரக்கம் (இ) நட்பு (ஈ) பகைமை
95. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுதல்.
தன்பினை, பிறவினை, செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களை கண்டெழுதுதல்:
தன்வினை வாக்கியத்தை தேர்ந்தெடுக்க:
(அ) கயல்விழி காலையில் படித்தாளா? (ஆ) கயல்விழி காலையில் படித்தாள்
(இ) கயல்விழி காலையில் படிக்கவில்லை (ஈ) கயல்விழி காலையில் படிப்பித்தாள்
96. கவிதா பாடம் படித்தாள் – இத்தொடரை பிறவினையாக்குக:
(அ) பாடம் கவிதாவால் படிக்கப்பட்டது (ஆ) கவிதா பாடம் படிப்பித்தாள்
(இ) பாடத்தைப் படித்தவள் கவிதா (ஈ) கவிதா பாடத்தைப் படிக்கவில்லை
97. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:
பந்து உருண்டது.
(அ) தன்வினைத் தொடர் (ஆ) பிறவினைத்தொடர்
(இ) செயப்பாட்டு வினைத்தொடர் (ஈ) எதிர்மறை வினைத்தொடர்
98. விடைக்கேற்ற வினா அமைக்க:
தமிழ்நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் மேட்டுப்பாளையம் ஆகும்.
(அ) கால்நடை வளங்கள் என்றால் என்ன?
(ஆ) தமிழ் நாட்டில் உள்ள வனக்கல்லூhகளின் எண்ணிக்கை எவ்வளவு?
(இ) தமிழ் நாட்டில் வனக்கல்லூரி அமைந்துள்ள இடம் எது?
(ஈ) காடு என்பதன் மற்றொரு பொருள் என்ன?
99. விடைக்கேற்ற வினா அமைக்க:
எனக்கு கதை எழுதத் தெரியும்
(அ) உனக்கு கதை எழுதத் தெரியுமா? (ஆ) உனக்கு எழுதத் தெரிந்த கதை எது?
(இ) உனக்குத் தெரிந்த கதைகள் என்னென்ன? (ஈ) உனக்குத் தெரிந்த கதைகளைக் கூறு?
100. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல் அறிக:
அ. Satellite 1. மீத்திறன் கணினி
ஆ. Intelligence 2. செயற்கைக் கோள்
இ. Super Computer 3. செயற்கை நுண்ணறிவு
ஈ. Artificial INtelligence 4. நுண்ணறிவு
அ ஆ இ ஈ
அ. 2 4 1 3
ஆ. 3 2 1 4
இ. 2 3 1 4
ஈ, 1 4 2 3