02-07-2022 TNPSC

Tnpsc Combined Engineering Services Exam Previous Questions And Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil

COMBINED ENGINEERING SERVICES IN EXAMINATION

1. வண்டாயெழுந்து என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

(அ) வண்டு + எழுந்து (ஆ) வண்டாய் + எழுந்து

(இ) வண்டா + எழுந்து (ஈ) வண்டு + எழு + உந்து

2. கண்டெடுக்கப்பட்டுள்ளன – பிரித்தெழுதுக

(அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன (ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

(இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன (ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

3. பெருங்கடல் – பிரித்தெழுதுக

(அ) பெரு+கடல் (ஆ) பெருமை + கடல்

(இ) பெரிய+கடல் (ஈ) பெருங்+கடல்

4. “மிசை” என்பதன் எதிர்ச்சொல்லை காண்க.

(அ) கீழே (ஆ) மேலே (இ) இசை (ஈ) வசை

5. பொருந்தா இணையைக் கண்டறிக.

(அ) உயிர்முன் உயிர் – மணியடி (ஆ) உயிர்முன் மெய் – பனிக்காற்று

(இ) மெய்ம்முன் உயிர் – ஆலிலை (ஈ) மெய்ம்முன் மெய் – கோலாட்டம்

6. பொருந்தா இணையைக் கண்டறிக.

(அ) தகளி – அகல் விளக்கு

(ஆ) இடர் ஆழி – துன்பக்கடல்

(இ) சுடர் ஆழியான் – சிவபெருமான்

(ஈ) வெய்ய கதிரோன் – வெப்பக்கதிர் வீசும் சூரியன்

7.பொருந்தாச் சொல்லைக் கண்டறிக

(அ) செங்காந்தள் – உம்மைத்தொகை

(ஆ) வீசு தென்றல் – வினைத்தொகை

(இ) மலர்க்கை – உவமைத்தொகை

(ஈ) சாரைப்பாம்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை

8. பொருந்தாத சொல்லை கண்டறிக.

(அ) வடக்கு – வாடைக்காற்று (ஆ) தெற்கு – தென்றல்காற்று

(இ) மேற்கு – கோடைக்காற்று (ஈ) கிழக்கு – கோடைக்காற்று

9. மரபு பிழைகளை நீக்கி எழுதுக.

இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்.

(அ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை பின்னினர்

(ஆ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

(இ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடைந்தனர்

(ஈ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை செய்தனர்

10. வழுவுச் சொற்களை நீக்கி எழுதுக.

எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின

(அ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மரம் வீசின.

(ஆ) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.

(இ) எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மறம் வீசின

(ஈ) என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின

11. மரபுப் பிழையற்ற தொடரைக் காண்க.

(அ) கோழி கத்த நரி அலறியது (ஆ) கோழி கூவ நரி உறுமியது

(இ) கோழி கொக்கரிக்க நரி ஊளையிட்டது (ஆ) கோழி உறும நி பிளிறியது

12. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிக.

(அ) Aesthetics – கலைச்சொல் (ஆ) Artifats – முருகியல்

(இ) Terminology – அழுகியல் (ஈ) Myth – தொன்மம்

13. வேர்ச்சொல்லைத் தேர்வு செய்தல்.

கீழ்க்கண்டவற்றுள் சரியான வேர்ச்சொல் இணையைக் கண்டறிக.

(அ) செல்-செல்றான் (ஆ) வந்து-வந்தான்

(இ) கொல்-கொன்றான் (ஈ) வென்று-வென்றான்

14. “மகிழ்ந்தனன்” – இச்சொல்லின் வேர்ச்சொல்லை க்ணடறிக.

(அ) மகிழ்ச்சி (ஆ) மகிழ்ந்தான் (அ) மகி (ஈ) மகிழ்

15. வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க.

உறங்கு.

(அ) உறங்கினாள் (ஆ) உறங்கியவள் (இ) உறங்குகிறார் (ஈ) உறங்கிய

16. “படித்து வந்தான்” எவ்வகை எச்சம்?

(அ) குறிப்புப் பெயரெச்சம் (ஆ) தெரிநிலைப் பெயரெச்சம்

(இ) பெயரெச்சம் (ஈ) வினையெச்சம்

17. கீழ்க்காணும் சொற்களை அகரவரிசைப்படுத்துக.

(அ) தோட்டம், தவம், தேடி, தாலாட்டு. தொட்டி

(ஆ) தேடி, தாலாட்டு, தொட்டி, தவம், தோட்டம்

(இ) தவம், தாலாட்டு, தேடி, தொட்டி, தோட்டம்

(ஈ) தாலாட்டு, தொட்டி, தோட்டம், தவம், தேடி

18. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்து

(அ) சூடு, சேவடி, செழிப்பு, சீற்றம், சினம் (ஆ) சினம், சீற்றம், சூடு, செழிப்பு, சேவடி

(இ) சேவடி, சூடு, செழிப்பு, சீற்றம், சினம் (ஈ) செழிப்பு, சீற்றம், சூடு, சேவடி, சினம்

19. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படுத்து.

(அ) மீள்பார்வை, மாண்பு,மரம்,மேடை,மௌனம்

(ஆ) மாண்பு,மீள்பார்வை,மரம்,மௌனம்,மேடை

(இ) மரம்,மாண்பு, மீள்பார்வை,மேடை,மௌனம்

(ஈ) மேடை,மௌனம்,மீள்பார்வை,மாண்பு, மரம்

20. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்.

(அ) பல வகையான மங்கலப் பொருள்களை முறையாக வைத்தனர்

(ஆ) முறையாக பல வகையான மங்கலப் வைத்தனர் பொருள்களை

(இ) பொருள்களை மங்கல முறையாக பல வகையான வைத்தனர்

(ஈ) மங்கலப் பொருள்களை பல வகையான முறையாக வைத்தனர்

21. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக.

“மணிமேகலை சிறைச்சாலைக்குச் சென்று உணவிட்டாள்”

(அ) மணிமேகலை எதனால் உணவிட்டாள்?

(ஆ) மணிமேகலை எங்கு சென்று உணவிட்டாள்?

(இ) மணிமேகலை யார்?

(ஈ) மணிமேகலை எதற்கு உணவிட்டாள்?

22. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

தன் வினைத் தொடரைக் கண்டறிக.

(அ) அவனை திருந்தச் செய்தான் (ஆ) அப்துல் நேற்று வருவித்தான்

(இ) பெரிய ஓவியம் வரைந்து வா (ஈ) அவர்கள் நன்றாகப் படித்தனர்

23. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக.

செய்வினைத் தொடரைக் கண்டறிக

(அ) உரை கவிதாவால் படிக்கப்பட்டது (ஆ) அவனை திருந்தச் செய்தான்.

(இ) அப்பா சொன்னார் (ஈ) பணம் காணாமல் போனது

24. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

“கீரியும் பாம்பும் போல”

– உவமை கூறும் பொருள் தெளிக.

(அ) பகைமை (ஆ) நட்பு (ஈ) ஒற்றுமை (ஈ) வேற்றுமை

25. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்.

கரன்சி நோட்.

(அ) கடன் அட்டை (ஆ) காசோலை (இ) வங்கி (ஈ) பணத்தாள்

26. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறிக.

(அ) சென்னையில் இவ்வரும் மழைப்பொழிவு அதிகம்.

(ஆ) லட்சுமி பள்ளிக்கு விரைந்து சென்றாள்

(இ) மன்னிக்கும் மனம் உள்ளவனே மனிதன்

(ஈ) காற்றின் உதவியால் செலுத்தப்படுபவை பாய்மரக் கப்பல்கள்

27. திருச்சிராப்பள்ளி என்தன் மரூஉ.

(அ) திருச்சிராப்பள்ளி (ஆ) திருச்சூர் (இ) திரிச்சூர் (ஈ) திருச்சி

28. ஊர்ப்பெயரின் மரூவை எழுதுக.

திருநெல்வேலி

(அ) திருநல்வேலி (ஆ) நெல்லைபுரம் (இ) நெல்லை (ஈ) திருவேலி

29. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

தேன், மழை, வான், செய், பூ எனும் சொற்களைக் கொண்டு உருவாக்கினால் வரும் தவறான சொல்லைக் கண்டறிக.

(அ) வான் மழை (ஆ) பூ மழை (இ) வான் செய் (ஈ) தேன் மழை

30. சரியான சொல் எது?

வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் ———— நின்றனர்

(அ) எழுதுகோல் (ஆ) சீருடையுடன் (இ) புத்தகம் (ஈ) உயர்நிலை

31. பொருத்தமான காலத்தை எடுத்து எழுதுக.

(அ) மலர் வீட்டுக்குச் செல்வாள் (நிகழ்காலம்)

(ஆ) கண்ணன் வந்தான் (எதிர்காலம்)

(அ) கண்ணன் வருவான் (இறந்தகாலம்)

(ஈ) மலர் வீட்டுக்குச் சென்றாள் (இறந்தகாலம்)

32. கபிலன் பேசினான்.

பேசினான் என்பது எக்காலத்தைக் குறிக்கும்?

(அ) எதிர்காலம் (ஆ) இறந்தகாலம் (இ) காலவழு (ஈ) நிகழ்காலம்

33. திருக்குறள் கருத்தின் அடிப்படையில் அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க. (உலகு)

(அ) கடலின்றி அமையாது ———– (ஆ) பகை இன்றி அமையாது ———

(இ) மலையின்றி அமையாது ————- (ஈ) நீரின்றி அமையாது ———–

34. அடைப்புக்குள் உள்ள பூவின் நலை குறித்த சொல்லைத் தகுந்த வாக்கியத்துடன் பொருத்துக.

(செம்மல்)

(அ) பூவின் தோற்றநிலை (ஆ) பூ வாடின நிலை

(இ) பூ விரியத் தொடங்கும் நிலை (ஈ) பூவின் மலர்ந்த நிலை

35. இரு பொருள் தருக.

மாலை – இரு பொருள் தருக.

(அ) மலை – மழை (ஆ) காலை – மாலை

(இ) பூ மாலை – மாலைப்பொழுது (ஈ) பகல் – இரவு

36. இரு பொருள் தருக.

நூல் – இரு பொருள் தருக

(அ) சிலப்பதிகாரம் – மணிமேகலை

(ஆ) ஆடைதைக்க உதவுவது நூல் – மூதுரை அற நூல்

(அ) பத்துப்பாட்டு – எட்டுத்தொகை

(ஈ) இராமாயணம் – மகாபாரதம்

37. குறில் – நெடில் மாற்றம் – பொருள் வேறுபாடு அறிக.

“கொடு – கோடு”

(அ) செய்தல் – வட்டம் (ஆ) தருதல் – நேராக வரைதல்

(இ) விருப்பம் – வளைவு (ஈ) உயரம் – குழந்தை

38. எர்த் வார்ம் தமிழ்ப்படுத்துக.

(அ) நாங்கூழ்ப்புழு (ஆ) புவி வெப்பம் (இ) உலகமயம் (ஈ) நிலநடுக்கம்

39. கலைச்சொல் அறிதல்.

Responsibility

(அ) உரிமை (ஆ) பணிவு (இ) முயற்சி (ஈ) கடமை

40. மெய்க்கீர்த்தி என்ற பெயர் யாருடைய காலத்தில் வந்தது?

(அ) சேரன் (ஆ) சோழன் (இ) பாண்டியன் (ஈ) பல்லவன்

41. கம்பர் தாம் இயற்றிய நூலுக்குத் தாமே இட்டப் பெயர் எது?

(அ) இராம சரிதம் (ஆ) இராமாவதாரம்

(இ) இராம வரலாறு (ஈ) இராமாயணம்

42. கீழ்க்கண்டவற்றுள் அடுக்குத்தொடரைக் கண்டறிக.

(அ) விறுவிறு (ஆ) கலகல (இ) மளமள (ஈ) பிடிபிடி

43. “வருக்கை” என்ற சொல்லின் பொருள் யாது?

(அ) வாழைப்பழம் (ஆ) மாம்பழம் (இ) பலாப்பழம் (ஈ) தேங்காய்

44. சரியான தொடரைத் தேர்ந்தெடுக்க.

(அ) மதுரை தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம்

(ஆ) தமிழ்த்தாயின் ஆணிவேர் துளிர்த்த இடம் மதுரை

(இ) ஆணிவேர் துளிர்த்த தமிழ்த்தாயின் இடம் மதுரை

(ஈ) மதுரை இடம் துளிர்த்த ஆணிவேர் தமிழ்த்தாய்

45. பிழை திருத்துதல்.

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓர் ஏரி (ஆ) ஒரு ஏரி (இ) ஓரேரி (ஈ) ஓராரி

46. பிழை திருத்துதல்.

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓர் கடல் (ஆ) ஒரு கடல் (இ) ஓரிரு கடல் (ஈ) ஒன்று கடல்

47. பிழையற்ற தொடரை எழுதுக.

(அ) வலப்பக்கம் சுவற்றில் எழுதாதே (ஆ) வலது பக்கம் சுவறில் எழுதாதே

(இ) வலப்பக்கச் சுவரில் எழுதாதே (ஈ) வலப்பக்கச் சுவறில் எழுதாதே

கீழ்க்கண்ட பத்தியினைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு.

இராமநாதபுரத்தை ஆட்சி செய்த செல்லமுத்து மன்னரின் ஒரே மகள் வேலுநாச்சியார். பன்மொழிப் புலமையும் போர்ப்பயிற்சியும் பெற்றவர். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதரை மணந்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார். காளையார் கோவிலில் நடைபெற்ற போரில் முத்துவடுகநாதர் ஆங்கிலேயரால் நஙவஞ்சகமாகக் கொல்லப்பட்டார். வேலுநாச்சியார் ஆங்கிலேயரை வென்று சிவகங்கையை மீட்க உறுதி பூண்டார். திண்டுக்கல் கோட்டையில் தங்கி ஒரு படை திரட்டி பயிற்சி அளித்தார். அமைச்சர் தாண்டவராயரும் தளபதிகளாகிய பெரிய மருது சின்ன மருது மற்றும் சிலரும் உடன் இருந்தனர். ஆண்கள் படைப்பிரிவுக்கு மருது சகோதரர்களும் பெண்கள் படைபிரிவுக்குக் குயிலும் தலைமை ஏற்றனர். வேலுநாச்சியாரைக் காட்டிக் கொடுக்கும் படி உடையாள் என்னும் பெண்ணை ஆங்கிலேயர்கள் வற்புறுத்தினர். மறுத்ததால் அவளைக் கொன்றுவிட்டனர். உடையாளின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்று அவருக்கு ஒரு நடுகல் நடப்பட்டது.

48. இராமநாதபுரத்தை ஆண்ட மன்னர் யார்?

(அ) செல்லமுத்து (ஆ) வேலுநாச்சியார்

(இ) முத்துவடுகநாதர் (ஈ) மருது பாணடியர்

49. முத்துவடுகநாதர் எப்பகுதியை ஆட்சி செய்தார்?

(அ) இராமநாதபுரம் (ஆ) சிவகங்கை (இ) திண்டுக்கல் (ஈ) காளையார் கோவில்

50. வேலுநாச்சியாரின் அமைச்சர் யார்?

(அ) குயிலி (ஆ) உடையாள் (இ) தாண்டவராயர் (ஈ) முத்துவடுகநாதர்

51. வேலுநாச்சியார் யாருடைய நினைவாக நடுகல் நட்டார்?

(அ) உடையாள் (ஆ) குயிலி

(இ) மருதுபாண்டியர் (ஈ) முத்துவடுகநாதர்

52. ஆண்கள் படைப்பிரிவின் தலைமை பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது?

(அ) செல்லமுத்து (ஆ) தாண்டவராயன் (இ) குயிலி (ஈ) மருது சகோதரர்கள்

53. கதிர் + ஈன – சேர்த்தெழுதுக

(அ) கதிரென (ஆ) கதியீன (இ) கதிரீன (ஈ) கதிரின்ன

54. அருந்துணை – பிரித்தெழுதுக.

(அ) அருமை + துணை (ஆ) அரு + துணை

(இ) அருமை + இணை (ஈ) அரு + இணை

55. எந்தமிழ்நா – பிரித்தெழுதுக.

(அ) எந் + தமிழ் + நா (ஆ) எந்த + தமிழ் + நா

(இ) எம் + தமிழ் + நா (ஈ) எந்தம் + தமிழ் + நா

56. சரியான நிறுத்தற்குறிகளை தருக.

(அ) தமிழ்மொழி இனிமை, வளமை, சீர்மை மிக்கது

(ஆ) தமிழ்மொழி இனிமை, வளமை, சீர்மை, மிக்கது.

(இ) தமிழ்மொழி இனிமை வளமை சீர்மை மிக்கது

(ஈ) தமிழ்மொழி,இனிமை,வளமை,சீர்மை மிக்கது.

57. எதிர்ச்சொல்லை எழுத்தெழுதுக.

நல்லவர்கள் தூற்றும்படி வளர்ந்து விடாதே

(அ) இகழும்படி (ஆ) போற்றும்படி (இ) துன்புறுத்தும்படி (ஈ) வணங்கும்படி

58. தவறான இணை எது?

(அ) ஆழி-கடல் (ஆ) நாவாய்-கப்பல் (இ) பணி-வேலை (ஈ) பறவை-பரவை

59. பொருந்தாச் சொல்லைக் கண்டறிதல்.

(அ) புள்-பறவை (ஆ) புள்-புல் (இ) பறவை-பறப்பது (ஈ) பனி-பணி

60. இதில் தவறான இணை எது?

(அ) போற்றார்-பகைவர் (ஆ) கிளை-உறவினர்

(இ) அலந்தவர்-வறியவர் (ஈ) பேதையார்-அறிவுடையார்

61. சந்திப்பிழையற்ற வாக்கியங்களைக் கண்டறிக.

1. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விடப்புகழ் பெற்றான் வள்ளல் பாரி

2. முல்லைக்குத் தேர்தந்து மழைமேகத்தை விட புகழ்ப் பெற்றான் வள்ளல் பாரி

3. புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்

4. புலவரின் சொல்லுக்காகத் தன் தலையையே தரத் துணிந்தான் குமண வள்ளல்

(அ) 1 மற்றும் 3 (ஆ) 1 மற்றும் 4 (இ) 2 மற்றும் 3 (ஈ) 2 மற்றும் 4

62. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.

(அ) தமிழ் – மூன்று (ஆ) மலையாளம் – மூணு

(இ) துளு – மூஜி (ஈ) தெலுங்கு – மூரு

63. மரபு பிழைகள் (தொகைமரபு)

மரபுப் பிழையற்ற சொல்லுடன் இணை.

ஆட்டு

(அ) நிரை (ஆ) மந்தை (இ) கூட்டம் (ஈ) அணி அணியாக

64. மரபுப் பிழையை நீக்குக.

மயில் கத்த குயில் பாடியது.

(அ) மயில் அகவ குயில் கூவியது (ஆ) மயில் அலற குயில் கத்தியது

(இ) மயில் ஆட குயில் பாடியது (ஈ) மயில் கத்த குயில் கரைந்தது

65. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல் அறிக.

(அ) Thesis – ஆய்வறிக்கை (ஆ) Intellectual – அறிவாளிகள்

(இ) Chamber – அறை (ஈ) Emblem – அரசு பதிப்பு

66. ஒலி மரபுப் பிழைகளைத் திருத்துக:

அலறும் மயிலும் கூவும் ஆந்தையும்

அகவும் சேவலும்

(அ) அகவும்,அலறும்,கூவும் (ஆ) அலறும்,அகவும்,கூவும்,

(இ) கூவும்,அகவும்,அலறும் (ஈ)அகவும்,கூவும்,அலறும்

67. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து, சரியான இணையைத் தெரிவு செய்க:

பனி-பணி

(அ) குளிர்ச்சி-பன்றி (ஆ) பன்றி-வேலை

(இ) குளிர்ச்சி-வேலை (ஈ) வேலை-குளிர்ச்சி

68. ஒரு பொருள் தரும் பல சொற்கள்.

தாள்,தண்டு, கோல், தூறு, தட்டு ஆகிய சொற்கள் தாவரத்தின் எப்பகுதியைக் குறிக்கும்?

(அ) அடிப்பகுதி (ஆ) கிளை (இ) இலை (ஈ) இளம்பயிர்

69. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

போது,அரும்பு,வீ,செம்மல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

(அ) இலை வகை (ஆ) கொழுந்து வகை (இ) கிளைப்பிரிவு (ஈ) பூவின் நிலை

70. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

தங்கம், நம்பிக்கை, ஞாயிறு, விடுதலை

(அ) தங்கம்,ஞாயிறு,நம்பிக்கை,விடுதலை

(ஆ) விடுதலை,நம்பிக்கை,தங்கம்,ஞாயிறு

(இ) ஞாயிறு,தங்கம்,நம்பிக்கை,விடுதலை

(ஈ) நம்பிக்கை,தங்கம்,ஞாயிறு,விடுதலை

71. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

தையல்,தம்பி,தீக்குச்சி,தாமரை,தும்பி

(அ) தையல்,தும்பி,தீக்குச்சி,தாமரை,தம்பி

(ஆ) தும்பி,தையல்,தாமரை,தீக்குச்சி,தம்பி

(இ) தாமரை,தீக்குச்சி,தம்பி,தையல்,தும்பி

(ஈ) தம்பி,தாமரை,தீக்குச்சி,தும்பி,தையல்

72. பொருந்தாத சொல்லைக் கண்டறிக:

(அ) சேலம்-மாங்கனி நகரம் (ஆ) சிவகாசி-முத்துநகரம்

(இ) திருவண்ணாமலை-தீபநகரம் (ஈ) மதுரை-தூங்கா நகரம்

73. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்:

கண்,சுடர்,சிவப்பு,கௌதாரி

(அ) சிவப்பு,கௌதாரி,சுடர்,கண் (ஆ) கண்,கௌதாரி,சிவப்பு,சுடர்

(இ) சுடர்,கௌதாரி,கண்,சிவப்பு (ஈ) சிவப்பு,சுடர்,கௌதாரி,கண்

74. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்:

சரியான தொடர் எது? கண்டறிந்து எழுதுக:

(அ) கதிரவன் மறையும் காலையில் உதித்து, மாலையில்

(ஆ) காலையில், மாலையில் உதித்து மறையும் கதிரவன்

(இ) கதிரவன் காலையில் உதித்து, மாலையில் மறையும்

(ஈ) மறையும் மாலையில் கதிரவன், உதித்து காலையில்

75. விடை வகையை கண்டறிக:

“கடைக்குப் போவாயா? ஏன்ற கேள்விக்குப் போக மாட்டேன்” என்று கூறுவது.

(அ) மறை விடை (ஆ) எதிர் விடை (இ) நேர்விடை (ஈ) சுட்டு விடை

76. விடை வகையை கண்டறிதல்:

“பாடம் படிக்கிறாயா? என்ற வினாவிற்கு “படிக்காமல் இருப்பேனா?” என்று கூறுவது.

(அ) மறை விடை (ஆ) இனமொழி விடை

(இ) நேர் விடை (ஈ) வினா எதிர் வினாதல் விடை

77. விடைக்கேற்ற வினா அமைக்க:

மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானே இயங்கும் இயந்திரம் தானியங்கி.

(அ) தானே இயங்குவது தானியங்கியா?

(ஆ) மனித முயற்சிகளுக்கு மாற்றாக தானியங்கி இயங்குகிறதா?

(இ) மனித முயற்சிகளுக்கு மாற்றாக இயங்கும் எந்திரம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

(ஈ) தானியங்கியின் பணி மனித முயற்சிக்கு மாற்றாக இயங்குவதா?

78. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

“நகமும் சதையும் போல” – உவமை கூறும் பொருளை எழுதுக.

(அ) வேற்றுமை (ஆ) நட்பு (இ) ஏமாற்றம் (ஈ) ஒற்றுமை

79. சரியான இணையைத் தேர்ந்தெடுக்க:

(அ) Storm-கடற்காற்று (ஆ) Tempest-புயல்

(இ) Tornado-சூறாவளி (ஈ) Sea Breeze-பெருங்காற்று

80. அலுவல் சார்ந்த கலைச்சொற்கள்:

தவறான இணையைத் தேர்ந்தெடுக்க:

(அ) Humanism-மனிதநேயம் (ஆ) Cultural Boundaries-பாரம்பரிய எல்லை

(இ) Cabinet-அமைச்சரவை (ஈ) Cultural Values-பண்பாட்டு விழுமியங்கள்

81. விடை வகைகள்:

“உனக்குக் கவிதை எழுதத் தெரியுமா?” ஏனற் வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரிபும்” என்று கூறுவது.

(அ) இனமொழி விடை (ஆ) உறுவது கூறல் விடை

(இ) உற்றது உரைத்தல் விடை (ஈ) குறிப்பு விடை

82. நிறுத்தற்குறிகளை அறிதல்:

நிறுத்தற்குறிகள் (எது சரியானது)

(அ) “கூரன் இங்கு வந்தாளா? அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?”

(ஆ) கூரன் இங்கு வந்தாளா! அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா.

(இ) கூரன் இங்கு வந்தாளா. அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா?

(ஈ) “கூரன் இங்கு வந்தாளா, அவள் எங்குச் சென்றாள் என்று தெரியுமா”

83. நிறுத்தற்குறிகளை அறிதல்:

நிறுத்தற்குறிகள் (எது சரியானது)

(அ) சீர்மை என்பது ஒழுங்கு முறையைக் குறிக்கும் சொல்?

(ஆ) உயர்திணை, அஃறிணை என இருவகைத் திணைகளை அறிவோம்.

(இ) “பாகற்காய் கசப்புச் சுவை உடையது”

(ஈ) தமிழ்மொழி பேசவும், படிக்கவும் எழுதவும் உகந்த மொழி!

84. அடிக்கோடிட்ட சொல்லின் எழுத்து வழக்கைத் தேர்ந்தெடு:

வயித்துக்குக் கஞ்சி ஊத்தி நாமும் குடிப்போம்

(அ) வயிறுக்கு (ஆ) வயறுக்கு (இ) வவுறுக்கு (ஈ) வயிற்றுக்கு

85. பேச்சு வழக்கு எழுத்து வழக்கு:

நீங்க சொன்ன எடத்துலதாண்ணே!

(அ) நீங்க சொன்ன இடமே தான் அண்ணே!

(ஆ) நீங்க சொன்ன இடத்தில்தான் அண்ணே!

(இ) நீங்க சொன்ன இடத்தில் அண்ணே!

(ஈ) நீங்க சொன்ன இடம் தான் அண்ணே!

86. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

ஆழ்வார்கள் ————– பேர்?

(அ) எப்படி (ஆ) எத்தனை (இ) ஏன் (ஈ) என்ன

87. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

(அ) நெல்லையப்பர் கோவில் எங்கு உள்ளது?

(ஆ) நெல்லையப்பர் கோவில் எங்கு ஆனது?

(இ) நெல்லையப்பர் கோவில் கற்களால் ஆனது?

(ஈ) நெல்லையப்பர் கோவிலில் பெருஞ்சுவர் உள்ளது?

88. அழைப்பு மணி ————, கயல்விழி கதவைத் திறந்தார்.

(அ) ஒலித்தது (ஆ) ஒலித்து (இ) ஒலித்ததால் (ஈ) ஒலிக்கும்

89. பொருத்துக:

அ. அடி அகரம் ஐ ஆதல் 1. செங்கதிர்

ஆ. முன்நின்ற மெய் திரிதல் 2. பெருங்கொடை

இ. ஆதிநீடல் 3. பைங்கூழ்

ஈ. இனமிகல் 4. காரிருள்

அ ஆ இ ஈ

(அ) 3 1 4 2

(ஆ) 4 2 1 3

(இ) 3 1 2 4

(ஈ) 2 3 1 4

90. குறில் – நெடில் மாற்றம் பொருள் வேறுபாடு அறிக:

விதி – வீதீ

(அ) அகலம் – வீடு (ஆ) வரி வதித்தல் – தெரு

(இ) தடைவிதித்தல் – தலைவலி (ஈ) வீடு பேறு – தலையெழுத்து

91. கூற்று – காரணம் : சரியா? தவறர்?

“மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்

மன்னனின் கற்றோன் சிறப்புடையன்”

கூற்று (1): இப்பாடலைப் பாடியவர் ஒளவையார்

(2) : ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதூரை போன்ற நூல்களை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

(3) : இவ்வடிகள் ஆச்திச்சூடியில் இடம் பெற்றுள்ளன.

(அ) கூற்று (1), (2), (3) தவறு (ஆ) கூற்று (2 சரி, (2), (3) தவறு

(இ) கூற்று: (1), (2), (3) சரி (ஈ) கூற்று : (1), (2) சரி (3) மட்டும் தவறு

92. கூற்று – காரணம் : சரியா? தவறர்?

கூற்று: (1) ஒரு நாட்டின் வளத்தைப் பாடுவதைப் புலவர்கள் கவிமரபாகக் கொண்டிருந்தனர்.

கூற்று: (2) : முத்தொள்ளாயிரம் சேரன், சோழன், பாண்டியன் ஆகியோருடைய நாடுகளின் வளங்களை நயமாக வெளிப்படுத்துகின்றது.

(அ) கூற்று இரண்டும் சரி (ஆ) கூற்று இரண்டும் தவறு

(இ) கூற்று (2) மட்டும் சரி (ஈ) கூற்று (1) மட்டும் சரி

93. சொல்லுக்கு இணையான பொருள் தருக:

காமம், வெகுளி, மயக்கம்.

(அ) ஈகை, கருணை, கோபம் (ஆ) கோபம், துன்பம், ஆசை

(இ) கருணை, சினம், ஈகை (ஈ) ஆசை, சினம், அறியாமை

94. சொல்லுக்கு இணையான பொருள் காண்க: ஊழி – ?

(அ) வானம் (ஆ) யுகம் (இ) முறை (ஈ) சிறப்பு

95. பொருத்தமான விடையறிக:

(அ) நீ வந்தேன் (ஆ) நீ வந்தாய் (இ) நாளை வந்தாய் (ஈ) நாளை வந்தேன்

96. சரியான கூட்டுப் பெயரைத் தெரிவு செய்க:

யானை

(அ) யானை மந்தை (ஆ) யானைகள் (இ) யானை நிரை (ஈ) யானைக்கூட்டம்

97. முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.

(அ) தமிழர்களின் வீர விளையாட்டு தொன்மையான ஏறு தழுவுதல்

(ஆ) தமிழர்களின் வீரு விளையாட்டு ஏறு தழுவுதல் தொன்மையான

(இ) தொன்மையான வீர விளையாட்டு தமிழர்களின் ஏறு தழுவுதல்

(ஈ) தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டு ஏறு தழுவுதல்

98. சொல்லையும் பொருளையும் பொருத்துக:

(அ) சாந்தம் 1. சிறப்பு.

(ஆ) மகத்துவம் 2. உலகம்

(இ) தாரணி 3. கருணை

(ஈ) இரக்கம் 4. அ மைதி

அ ஆ இ ஈ

(அ) 4 1 2 3

(ஆ) 1 2 3 4

(இ) 4 3 2 1

(ஈ) 3 4 1 2

99. ஒருமை பன்மை பிழை நீக்குக:

(அ) சூரியன் உதித்தான (ஆ) மாலையில் சூரியன் மறைந்தது

(இ) நானும் அவனும் வந்தேன் (ஈ) மந்தையில் மேய்ப்பர்கள் வந்தார்கள்

100. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கின்றார்கள்

(ஆ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறான்

(இ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கின்றன

(ஈ) கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கின்றது

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.