Tnpsc Executive Officer Grade III Exam Previous Questions and Answer Key 2022 – General Tamil and General Studies in Tamil
EXECUTIVE OFFICER, GRADE- III (GROUP- VII- B SERVICES) IN TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS SUBORDINATE SERVICE
1. கீழ்க்கண்டவற்றில் எது கவிஞர் தேனரசன் படைப்பு இல்லை?
(அ) மண்வாசல்
(ஆ) வெள்ளை ரோஜா
(அ) பெய்து பழகிய மேகம்
(ஈ) மழை பற்றி பகிர்தல்கள்
2. பொதுமொழிக்கு எடுத்துக்காட்டு
(அ) துட்டு
(ஆ) எட்டு
(இ) சாத்தன்
(ஈ) நிலம்
3. காலம் கடந்த பெயரெச்சம்
(அ) பண்புத்தொகை
(ஆ) வினைத்தொகை
(இ) உவமைத்தொகை
(ஈ) வேற்றுமைத்தொகை
4. பாஞ்சாலி சபதத்தில் பாம்புக் கொடியவன் என்றழைக்கப்படுபவன்?
(அ) துரியோதனன் (ஆ) துச்சாதனன் (இ) சகுனி (ஈ) கர்ணன்
5. காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரது மேடை பேச்சினை மொழிபெயர்த்த பெருமகனார்
(அ) பாரதியார் (ஆ) கவிமணி (இ) திரு.வி.க (ஈ) வ.உ.சி
6. 1856ல் “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர்
(அ) கமில்சுவலபில் (ஆ) ஆந்திரனோவ் (இ) ஸ்டென்கனோ (ஈ) கால்டுவெல்
7. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” எனப் புகழ்ந்துரைத்த கவிஞர்
(அ) தேவநேயப் பாவாணர் (ஆ) சந்தக் கவிமணி தமிழழகனார்
(இ) பாரதியார் (ஈ) நாமக்கல் கவிஞர்
8. உழைக்கும் மக்கள் தம் களைப்பை மறக்க பாடும் பாடல் வகை எது?
(அ) நாட்டுப்புறபாடல் (ஆ) சங்க இலக்கியப்பாடல் (இ) பக்திப்பாடல் (ஈ) சமயப்பாடல்
9. “பகை” என்னும் பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க:
(அ) நே (ஆ) சீ (இ) தூ (ஈ) மோ
10. தவறான ஒலி மரபுச் சொல்லைத் தேர்வு செய்க:
(அ) குயில் கூவும் (ஆ) மயில் அகவும் (இ) புறா குழறும் (ஈ) கிளி பேசும்
11. உழவு பற்றிய பழமொழியைத் தேர்வு செய்க:
(அ) அகல உழுவதைவிட ஆழ உழுவதே மேல் (ஆ) வேலியே பயிரை மேய்வது போல
(இ) ஆடிப்பட்டம் தேடி விதை (ஈ) வரப்பு உயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்
12. “கூடா நட்புக் கேடாய் முடியும்”
– இப்பழமொழியால் நாம் அறிவனவற்றைத் தேர்க:
கூற்று 1: தீயவரோடு கொண்ட நட்பு துன்பத்தில் முடியும்.
கூற்று 2: நட்பு நமக்குக் கேடயம் போல பாதுகாப்பு தரும்
(அ) கூற்று 1 சரி (ஆ) கூற்று 2 சரி (இ) கூற்று 1ம், 2ம் சரி (ஈ) கூற்று 1ம், 2ம் தவறு
13. நும்மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம்மனை வதுவை நல்மணம் கழிக – இவ்வரிகள் இடம்பெற்ற நூல் எது?
(அ) குறந்தொகை (ஆ) ஐங்குறுநூறு (இ) நற்றிணை (ஈ) அகநானூறு
14. பாவகையால் பெயர் பெற்ற சங்க இலக்கிய எட்டுத் தொகை நூல்கள்
(அ) பதிற்றுப்பத்து, பரிபாடல் (ஆ) கலித்தொகை, மதுரைக்காஞ்சி
(இ) மலைபடுகடாம், நெடுநல்வாடை (ஈ) பரிபாடல், கலித்தொகை
15. அகநானூறு ——— எனவும் அழைக்கப்படுகிறது
(அ) பெரியநூல் (ஆ) நெடுந்தொகை (இ) பழமொழி நானூறு (ஈ) இனியவை நாற்பது
16. அகன் அமர் காதல் ஐய? நின்னொடும் எழுவர் ஆனேம் என்று இராமன் யாரைக் குறிப்பிடுகிறான்?
(அ) குகன் (ஆ) சுக்ரீவன் (இ) அனுமன் (ஈ) வீடணன்
17. ஒவ்வொரு சிவனடியார் பெருமையையும் ஓர் அடியில் கூறும் நூலைப் பாடியவர்
(அ) சேக்கிழார் (ஆ) சுந்தரர் (இ) நம்பியாண்டார் நம்பி (ஈ) மாணிக்கவாசகர்
18. திருவிளையாடற் புராணத்தில் உள்ள திருவிளையாடல்களின் எண்ணிக்கை
(அ) 60 (ஆ) 63 (இ) 64 (ஈ) 18
19. முனைப்பாடியார் இயற்றிய “அறநெறிச்சாரம்” எத்தனை பாடல்களைக் கொண்டது?
(அ) 215 (ஆ) 225 (இ) 235 (ஈ) 205
20. அகர வரிசையில் அமைத்தெழுது: மீன், மண், முன், மான், மூடி, மெல்ல, மிளகு, மேடு
(அ) மான், மூடி, மிளகு, மேடு, மெல்ல, மீன், மண், முன்
(ஆ) மண், மீன், முன், மூடி, மிளகு, மேடு, மெல்ல, மான்
(இ) மண், மான், மிளகு, மீன், முன், மூடி, மெல்ல, மேடு
(ஈ) மான், முன், மூடி, மேடு, மெல்ல, மிளகு, மண், மீன்
21. வேர்ச்சொல் – காண்க:
ஞாலம்
(அ) ஞல் (ஆ) ஞாள் (இ) ஞால் (ஈ) ஞாலு
22. பொருத்தமான விடையைத் தெரிவு செய்க:
“குழந்தை தனது ஒரு விரலைக் காட்டி
இந்த விரல் சின்ன விரலா? பேரிய விரலா?
எனக் கேட்பது?”
(அ) வினா வழு (ஆ) மரபு வழு (இ) பால் வழு (ஈ) திணை வழு
23. பொருந்தாததைக் கண்டறிக:
(அ) வெண்டைக்காய் (ஆ) தண்ணீர்த்தொட்டி (இ) அத்திக்காய் (ஈ) ஆலங்காய்
24. ஆதிரையான் என்பது எவ்வகைப் பெயர்ச்சொல்லைக் குறிக்கிறது?
(அ) பொருட்பெயர் (ஆ) காலப்பெயர் (இ) இடப்பெயர் (ஈ) பண்புப்பெயர்
25. சொற்களை முறைப்படுத்துக:
(அ) ஏகலை கலையை அம்பு விடும் தமிழ் என்றது (ஆ) அம்பு விடும் கலையை ஏகலை என்றது தமிழ்
(இ) அம்பு விடும் தமிழ் என்றது ஏகலை கலையை (ஈ) தமிழ் ஏகலை என்றது அம்பு விடும் கலையை
26. ஓரெழுத்து ஒரு மொழியின் பொருள் தருக:
நா
(அ) கொடு (ஆ) ஆடை (இ) நாக்கு (ஈ) நான்
27. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளைத் தேர்க:
தால் – தாள்
(அ) தாலாட்டு – பாதம் (ஆ) சித்திரம் – வண்ணம் (இ) நூல் – எழுத்து மொழி (ஈ) பார்வை – மெய்
28. தமிழ், ஆட்சி மொழியாகத் திகழும் நாடுகள் எவை?
(அ) இலங்கை, சிங்கப்பூர், மலேசியா (ஆ) சிங்கப்பூர், இங்கிலாந்து, இலங்கை
(இ) தாய்லாந்து, பிரிட்டன், பிஜித்தீவு (ஈ) இலங்கை, கனடா, மலேசியா
29. கிரேக்க அறிஞர் தாலமி தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாக எந்த ஊரைக் குறிப்பிட்டுள்ளார்?
(அ) கோயம்புத்தூர் (ஆ) திருச்சிராப்பள்ளி (இ) திருப்பூர் (ஈ) கரூர்
30. தமிழகத்தின் தலைநகராக சென்னையே இருக்க வேண்டும் என்பதற்காக “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என முழங்கியவர்
(அ) தந்தை பெரியார் (ஆ) நேசமணி
(இ) சங்கரலிங்கம் (ஈ) ம.பொ.சிவஞானம்
31. அம்பேத்கரின் இயற்பெயர் ———- ஆகும்
(அ) இராம்ஜி சக்பால் (ஆ) சக்பால் (இ) இராம்ஜி (ஈ) பீமாராவ் இராம்ஜி
32. வாணிதாசனின் நூல்கள்
(அ) தமிழச்சி, கொடிமுல்லை, இதயக்கோயில் (ஆ) தமிழச்சி, கொடிமுல்லை, தொடுவானம்
(இ) தமிழச்சி, பிச்சைக்காரன், தொடுவானம் (ஈ) தமிழச்சி, பிச்சைக்காரன், இதயக்கோயில்
33. “ஆண்டிப்பண்டாரம் – உனை வேண்டிக்கொண்டேனே”
எனும் நாட்டுப்பாடலை ஒட்டி “தீண்டாதார் விண்ணப்பம்” பாடியவர்
(அ) பாரதியார் (ஆ) கவிமணி தேசிய விநாயகனார்
(இ) பாரதிதாசன் (ஈ) நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார்
34. வேங்கடத்தில் குலசேகராழ்வார் ———–ஆக இருக்க விரும்பினார்
(அ) மீன் (ஆ) கொக்கு (இ) வில் (ஈ) படி
35. 1981-ல் முதல் உலகத்தமிழ் மாநாட்டில் “மாந்தன் தோற்றமும் தமிழர் மரபும்” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றியவர்
(அ) வையாபுரிப்பிள்ளை (ஆ) அ.சிதம்பர நாதன்
(இ) சாலை.இளந்திரையன் (ஈ) தேவநேயப்பாவாணர்
36. “தமிழ் மகள்” என பாரதியாரால் அழைக்கப்பெற்ற பெண்பாற்புலவர்
(அ) ஒளவையார் (ஆ) காக்கைப் பாடினியார் (இ) வெள்ளிவீதியார் (ஈ) நக்கண்ணையார்
37. கூற்றும் காரணமும்:
கூற்று: காவடியாட்டம் மரத்தண்டின் இரு முனைகளிலும் சிறப் வேலைப்பாடுள்ள பலகையைப் பொருத்தி மூங்கில் குச்சிகளால் அரைவட்டமாக இணைக்கின்றனர்.
காரணம்: “கா” என்பதற்குப் பாரந்தாங்கும் கோல் என்று பெயர்
(அ) கூற்று சரி காரணம் தவறு
(ஆ) கூற்றும் சரி காரணமும் சரி
(இ) கூற்று தவறு காரணம் சரி
(இ) கூற்றும் சரி காரணமும் சரி ஆனால் கூற்றிற்கான சரியான காரணம் இல்லை
38. “மரக்கால் கூத்து” – என்று அழைக்கப்படுவது
(அ) கோலாட்டம் (ஆ) பொய்க்கால் குதிரையாட்டம்
(இ) பொடிக்கழி ஆட்டம் (ஈ) கழியல் ஆட்டம்
39. “உலக சரித்திரம்” என்ற உலகப் புகழ் பெற்ற நூலின் ஆசிரியர்
(அ) காந்தியடிகள் (ஆ) இந்திரா காந்தி
(இ) ஜவஹர்லால் நேரு (ஈ) சர்தார் வல்லபாய் படேல்
40. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:
வளவன் “கிணற்றுத் தவளை” போல வாழந்தான்
(அ) வளவன் எல்லாம் அறிந்தவன் ஆக வாழ்ந்தான்
(ஆ) வளவன் ஏதும் அறியாதவன் ஆக வாழ்ந்தான்
(இ) வளவன் குறுகிய அறிவுடையவன் ஆக வாழ்ந்தான்
(ஈ) வளவன் மூடனாக வாழந்தான்
41. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடு:
பாரியின் பறம்பு மலையின் புகழ் “குன்றின் மேலிட்ட விளக்கு போல” பரவியது
(அ) விளக்கு குன்றின் மேல் அமைந்துள்ளது (ஆ) பறம்பு மலையின் புகழ் மங்கியது
(இ) பறம்பு மலையின் புகழ் ஓங்கியது (ஈ) பறம்பு மலையில் விளக்கு அமையவில்லை
42. கீழ்வருவனவற்றுள் “செய்வினை” – வாக்கியம் எது?
(அ) விருது வழங்கியது யார்? (ஆ) “வேலா இலக்கணத்தை நன்றாகப் படி”
(இ) அமைச்சர் விருது வழங்கினார் (ஈ) நான் இலக்கணம் கற்று வாழ்வில் உயர்ந்தேன்
43. பின்வருவனவற்றுள் வினாத்தொடர் அல்லாத ஒன்றைக் கண்டறிக:
(அ) கானலின் நீரோ (ஆ) வானகமே, இளவெயிலே, மரச்செறிவே
(இ) காட்சிப் பிழைதானோ (ஈ) நானும் ஓர் கனவோ
44. அடிநிமிர் வில்லாச் செய்யுட் தொகுதி
அறம்பொருள் இன்பம் அடுக்கி அவ்வகைத்
திறம்பட வருவது
(அ) கீழ்க்கணக்கு நூல்கள் (ஆ) மேற்கணக்கு நூல்கள் (இ) தொல்காப்பியம் (ஈ) நன்னூல்
45. கணிமேதாவியார் எந்த சமயத்தைச் சார்ந்தவர்
(அ) சைவம் (ஆ) சமணம் (இ) வைணவம் (ஈ) பௌத்தம்
46. வாழ்வுக்குரிய அன்பு நெறியைக் கூறும் உயர்ந்த நூல் – திருக்குறள் என்று பாராட்டியவர் யார்?
(அ) மல்லார்மே (ஆ) ஆல்பர்ட் ஸ்வைட்சர் (இ) விட்னே (ஈ) வால்ட் விட்மன்
47. தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல் எது?
(அ) தேவாரம் (ஆ) பெரியபுராணம் (இ) திருமந்திரம் (ஈ) சிலப்பதிகாரம்
48. தேவநேயப் பாவாணர்
கூற்று 1: “மொழிஞாயிறு” என்றழைக்கப்படுகிறார்.
கூற்று 2: செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றியவர்.
கூற்று 3: “பள்ளிப் பறவைகள்” என்ற நூலை எழுதியவர்
(அ) கூற்று 1 மற்றும் 3 சரி (ஆ) கூற்று 2 மற்றும் 3 சரி
(இ) கூற்று 1 மட்டும் சரி (ஈ) கூற்று 1 மற்றும் 2 சரி
49. தம் மீது எச்சமிட்ட கொக்கை விழித்துப் பார்த்து எரித்தவர்
(அ) போகர் (ஆ) புலிப்பாணி (இ) கொங்கணர் (ஈ) சட்டை முனி
50. அட்டமாசித்திகள் – இதில் அட்டம் எனும் சொல்லின் பொருள்
(அ) ஐந்து (ஆ) ஆறு (இ) எட்டு (ஈ) ஒன்பது
51. “வள்ளைப்பாட்டு” என்பது
(அ) உலக்கைப் பாட்டு (ஆ) வாய்ப்பாட்டு
(இ) தெம்மாங்குப் பாட்டு (ஈ) உழவுப்பாட்டு
52. தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்.
இயைபு சொற்கள் யாது?
(அ) தப்பேது, தருட்புகழை (ஆ) நான் செயினும், நீ பொறுத்தல்
(இ) இயம்பிடல், எந்தை (ஈ) வேண்டும், வேண்டும்
53. சந்திப்பிழை அற்ற வாக்கியத்தை கண்டறிக:
(அ) இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்
(ஆ) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மகளுக்கு புனிதமானதாகும்
(இ) இந்த பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்
(ஈ) இந்தப் பூமியின் ஒவ்வொரு துகளும் எம்மக்களுக்குப் புனிதமானதாகும்
54. பிள்ளைத் தமிழுக்குரிய பருவங்கள்
(அ) 3 (ஆ) 10 (இ) 11 (ஈ) 9
55. பாரதி தன் குயில்பாட்டில் பாடும் பாடல் வரிகளைக் கண்டறிக
(அ) வார்த்தைத் தவறிவிட்டாய் – அடி கண்ணம்மா மார்பு துடிக்கு தடீ
(ஆ) பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
(இ) பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா
(ஈ) உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளியுண்டாகும்
56. “நீராருங் கடலுடுத்த…” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து இடம் பெற்றுள்ள நூல்
(அ) சீவக சிந்தாமணி (ஆ) மணிமேகலை (இ) தேம்பாவணி (ஈ) மனோன்மணியம்
57. “ஊரொடு தோற்றமும் உரித்தென மொழிப” – என்ற தொல்காப்பிய நூற்பாவுக்கேற்றதொரு இலக்கிய வடிவம்
(அ) பரணி (ஆ) உலா (இ) குறவஞ்சி (ஈ) பள்ளு
58. “குறம்” என கூறப்பெறும் சிற்றிலக்கிய வகை எது?
(அ) குறவஞ்சி (ஆ) கோவை (இ) மணிமாலை (ஈ) கலம்பகம்
59. ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருள் தரும் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
புலி-புளி
(அ) விலங்கு-பழம் (ஆ) வண்ணம்-பறவை (இ) நூல்-எழுதுகோல் (ஈ) ஆடு-கன்று
60. சரியான தமிழ்ச்சொல் தெரிவு செய்க:
Folk Arts
(அ) நாட்டுப்புறக் கலைகள் (ஆ) நாட்டுப்புறக் கலை
(இ) நாட்டுப்புறப் பாடல் (ஈ) நாட்டுப்புற விழா
61. “ரேவதி” என்ற புனைப்பெயரில் படைப்புகளை எழுதியவர் யார்?
(அ) வல்லிக்கண்ணன் (ஆ) ந.பிச்சமூர்த்தி (இ) சு.சமுத்திரம் (ஈ) தி.ஜானகிராமன்
62. அணிகளின் இலக்கணத்தைக் கூறும் நூல்களுள் முதன்மையானது?
(அ) மாறனலங்காரம் (ஆ) தண்டியலங்காரம்
(இ) தொல்காப்பியம் (ஈ) வீர சோழியம்
63. பழமொழிகள்:
ஆங்கிலப் பழமொழிக்கு இணையான தமிழ்ப் பழமொழியில் சரியானதைக் கண்டறிக:
Arts is long but life is short
(அ) கல்வி கற்பவர் கரையில நாள் சில (ஆ) கல்வி கரையில, கற்பவர் நாள்
(இ) கற்பவர் நாள் சில கல்வி கரையில (ஈ) கல்வி கரையில நாள் சில கற்பவர்
64. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு மூன்று டன் முதல் எட்டு டன் வரை எடை உள்ள ——- கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
(அ) 3581 (ஆ) 3481 (இ) 3681 (ஈ) 3781
65. “நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்” என்று பாடியவர்
(அ) கவிமணி (ஆ) பாரதிதாசன் (இ) பாரதியார் (ஈ) நாமக்கல் கவிஞர்
66. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாகத் தொடங்கும் காப்பியம் எது?
(அ) கம்பராமாயணம் (ஆ) சிலப்பதிகாரம் (இ) சீவக சிந்தாமணி (ஈ) மணிமேகலை
67. “முதிரையும் சாமையும் வரகும் மொய்மணிக்
குதிரைவா லியும்களம் குவித்துக் குன்று என”
– இவ்வரிகள் குறிக்கும் நிலம்
(அ) குறிஞ்சி (ஆ) முல்லை (இ) மருதம் (ஈ) நெய்தல்
68. திரிகடுகம் எனும் நூலின் வெண்பாக்களின் எண்ணிக்கை
(அ) 100-வெண்பாக்கள் (ஆ) 102-வெண்பாக்கள் (இ) 200-வெண்பாக்கள் (ஈ) 90-வெண்பாக்கள்
69. கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன்
(அ) செயங்கொண்டார் (ஆ) மூன்றாம் நந்திவர்மன்
(இ) முதற் குலோத்துங்க சோழன் (ஈ) தொண்டைமான்
70. தமிழின் முதல் அகராதியான சதுரகராதியை இயற்றியவர்
(அ) ஜி.யு.போப் (ஆ) கால்டுவெல்
(இ) எட்கார் ஆலன்போ (ஈ) வீரமாமுனிவர்
71. சரியான அகர சரிசையில் அமைந்த தொடரைத் தேர்க:
(அ) மழையில் மண்டூகம் மாய்ந்தது (ஆ) மண்டூகம் மழையில் மாய்ந்தது
(இ) மாய்ந்தது மண்டூகம் மழையில் (ஈ) மழையில் மாய்ந்தது மண்டூகம்
72. “படி” என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடு
(அ) படித்தவர் (ஆ) படித்தனர் (இ) படிக்கிறான் (ஈ) படிப்பான்
73. “வா” என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை தேர்ந்தெடுக்க
(அ) வருதல் (ஆ) வந்தான் (இ) வந்து (ஈ) வந்த
74. “அமர்ந்தான்” என்ற சொல்லின் வேர்ச்சொல்லை தேர்க:
(அ) அமர் (ஆ) அமரர் (இ) அமரார் (ஈ) அமர்ந்த
75. பொருத்துக:
அ. செய்யுளிசை அளபெடை 1. எங்ங்கிறைவன்
ஆ. இன்னிசை அளபெடை 2. வரனசைஇ
இ. சொல்லிசை அளபெடை 3. கெடுப்பதூஉம்
ஈ. ஓற்றளபெடை 4. நல்ல படாஅ பறை
அ ஆ இ ஈ
அ. 4 3 2 1
ஆ. 4 3 1 2
இ. 1 2 3 4
ஈ. 1 2 4 3
76. “மூடுபனி” என்ற சொல்லின் இலக்கணக் குறிப்பு
(அ) பண்புத்தொகை (ஆ) வினையெச்சம் (இ) பெயரெச்சம் (ஈ) வினைத்தொகை
77. முகத்தைக் குறிப்பது ———- பெயர் ஆகும்
(அ) பொருட்பெயர் (ஆ) இடப்பெயர் (இ) குணப்பெயர் (ஈ) சினைப்பெயர்
78. “தமிழ் மாணவன்” என்று தம்மை அறிவித்துக்கொண்டவர் யார்?
(அ) ஜி.யு.போப் (ஆ) வீரமாமுனிவர் (இ) குணங்குடி (ஈ) பரிதிமாற்கலைஞர்
79. சேரநாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுள் ஒன்று
(அ) தந்தம் (ஆ) தங்கம் (இ) பவளம் (ஈ) செம்பு
80. அடையாற்றில் அவ்வை இல்லம் நிறுவப்பட்ட ஆண்டு எது?
(அ) 1930 (ஆ) 1952 (இ) 1882 (ஈ) 1848
81. “தீம்பிழி எந்திரம் பந்தல் வருந்த” என கரும்பைப் பிழியும் எந்திரம் பற்றிக் கூறும் நூல்
(அ) நற்றிணை (ஆ) பதிற்றுப்பத்து (இ) பரிபாடல் (ஈ) கலித்தொகை
82. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
(அ) கால்டுவெல் (ஆ) வீரமாமுனிவர் (இ) ஜி.யு.போப் (ஈ) ஷெல்லி
83. தத்துவச் சரடு, இருண்மை, அறிவியல் நுட்பம், படிமம், அங்கதம் ஆகியவற்றை உத்திகளாகக் கொண்டு கவிதை படைத்தவர்
(அ) ஞானக்கூத்தன் (ஆ) சி.மணி (இ) அப்துல் ரகுமான் (ஈ) தருமு சிவராமு
84. பிகூ, ரேவதி ஆகிய புனை பெயர்களில் படைப்புகளை எழுதியவர்
(அ) பசுவைய்யா (ஆ) கலாப்ரியா (இ) கல்யாணஜி (ஈ) ந.பிச்சமூர்த்தி
85. “காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக் கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்” என்று கூறியவர்
(அ) கண்ணதாசன் (ஆ) வாணிதாசன் (இ) முடியரசன் (ஈ) பாவாணர்
86. கொடுக்கப்பட்டுள்ள பெயர்களுள் கரிசிலாங்கண்ணியின் பெயர் அல்லாத ஒன்றினைக் கண்டறிக
(அ) கையாந்தகரை (ஆ) ஞானப்பச்சிலை (இ) பிருங்கராசம் (ஈ) தேகராசம்
87. “தமிழ்மொழி தோற்றமும் வளர்ச்சியும்” என்ற ஆங்கிலக் கட்டுரை எழுதியவர்
(அ) பரிதிமாற் கலைஞர் (ஆ) சி.இலக்குவனார் (இ) ஆறுமுக நாவலர் (ஈ) வையாரி
88. “வசன நடை கைவந்த வல்லாளர்” என்று ஆறுமுக நாவலரைப் பாராட்டியவர் யார்?
(அ) சங்கரதாஸ் சுவாமிகள் (ஆ) பரிதிமாற் கலைஞர் (இ) பரிமேலழகர் (ஈ) தாயுமானவர்
89. எப்பண்பின் அடிப்படையில் நாடகக் கலைஅமைந்துள்ளது?
(அ) போலச் செய்தல் (ஆ) பார்த்து செய்தல் (இ) பாடி செய்தல் (ஈ) அசைந்து செய்தல்
90. இரண்டு வாக்கியங்களுக்கிடையே வரும் சரியான இணைப்புச் சொல்லை அறிக:.
அறிவைவிட மிகவும் முக்கியமானது கற்பனைத்திறன். அறிவு என்பது நாம் தற்போது அறிந்தும் புரிந்தும் வைத்திருப்பவற்றோடு முடிந்து விடுகிறது.
(அ) எனவே (ஆ) ஆகையால் (இ) ஏனெனில் (ஈ) அதனால்
91. விடைக்கேற்ற பொருத்தமான வினாவைத் தேர்க:
அன்னம் கூடை முடைந்தாள்
(அ) அன்னம் கூடை முடைந்தாளா? (ஆ) அன்னம் கூடை முடைந்தாள் என்பது சரியா?
(இ) அன்னம் என்ன செய்தாள்? (ஈ) அன்னம் என்பது பறவையா?
92. துவ்வா – என்பதன் எதிர்ச்சொல் யாது?
(அ) நுகருதல் (ஆ) கொடுத்தல் (இ) விலக்குதல் (ஈ) பறித்தல்
93. பொருந்தமற்ற இணை தேர்க:
இங்கே இருப்பது சிலகாலம்
இதற்குள் ஏனோ அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம்
எண்ணிப்பாரு தெளிவாகும்.
– இப்பாடலில் இடம்பெற்றுள்ள நயங்களின்படி பொருந்தாத எதுகை, மோனை, இயைபு எது எனக் கண்டறிந்து எழுதுக:
(அ) இங்கே, இருப்பது – சீர்மோனை (ஆ) இதற்குள், இதனால் – அடி எதுகை
(இ) பாவம், லாபம் – இயைபு (ஈ) இருப்பது, இதனால் – இணை மோனை
94. கீழ்வருவனவற்றுள் “செயப்பாட்டு வினை வாக்கியம்” எது?
(அ) மூவர் தேவாரத்தை இயற்றினர் (ஆ) பாண்டியன் கதவைத் தட்டினான்
(இ) நான் மனம் திறந்து பேசுகிறேன் (ஈ) “பாண்டியன் பரிசு” – பாரதிதாசனால் பாடப்பட்டது
95. கீழ்க்கண்டவற்றுள் கட்டளைத் தொடர்கள் எவை?
1. ஆகராதியில் காண்க.
2. படம் தரும் செய்தியைப் பத்தியாகத் தருக.
3. காட்சியைக் கண்ட கவினுற எழுதுக.
4. புயலின்போது வெளியே செல்ல வேண்டாம்
(அ) 1,2 ஆகிய இரண்டும் சரி (ஆ) 1 மட்டும் கட்டளைத் தொடர்
(இ) 1,2,3 ஆகிய மூன்றும் கட்டளைத் தொடர்கள் (ஈ) 1, 4 ஆகிய இரண்டும் சரி
96. சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடர் உருவாக்குக:
ஒருவர் புலவர்களுள் மருதன் இளநாகனார் சங்ககாலம்
(அ) ஒருவர் மருதன் இளநாகனார் புலவர்களுள் சங்ககாலம்
(ஆ) மருதன் இளநாகனார் புலவர்களுள் ஒருவர் சங்ககாலம்
(இ) ஒருவர் சங்ககாலப் புலவர்களுள் மருதன் இளநாகனார்
(ஈ) மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்
97. தாளாற்றித் தந்த பொருளென்று வள்ளுவர் உரைப்பது
(அ) மூதாதையர் கொடுத்த பொருள் (ஆ) இலவசமாக வந்த பொருள்
(இ) தன்முயற்சியால் ஈட்டிய பொருள் (ஈ) தானமாக தந்த பொருள்
98. குடும்பம் எனும் சொல் முதன்முதலில் இடம் பெற்ற நூல்
(அ) தொல்காப்பியம் (ஆ) நன்னூல் (இ) சங்க இலக்கியம் (ஈ) திருக்குறள்
99. பிரான்சு “தேசிய நூற்கூடத்தில் (Bibliothque Nationale) மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ் சரளிப்புத்தகம், புதுச்சேரி அம்மன் பிள்ளைத்தமிழ் முதுலிய நூல்கள் உள்ளன” என்று கூறியவர்
(அ) கால்டுவெல் (ஆ) ஈராஸ் பாதிரியார்
(இ) தனிநாயக அடிகள் (ஈ) பெர்சிவல் பாதிரியார்
100. கன்னிமாரா நூலகம் அமைந்துள்ள இடம்
(அ) சென்னை அண்ணாநகர் (ஆ) சென்னை எழும்பூர்
(இ) சென்னை கோட்டூர்புரம் (ஈ) சென்னை கோயம்பேடு