06-06-2022 TNPSC

Tnpsc Assistant Director Exam Previous Questions and Answer key 2022 – General Studies in English

ASSISTANT DIRECTOR OF TOWN AND COUNTRY PLANNING IN TAMIL NADU GENERAL SERVICE

1. தவறான இணையை அறிக:

(அ) ஜ்வாலை – தீயின் அனல் (ஒளி) (ஆ) கார்ஹாரன் – மகிழ்வுந்து ஒலி

(இ) சப்தம் – ஓசை (ஈ) ஈக்வலாக – நிலையாக

2. “இது செய்வாயா” என்று வினவியபோது “நீயே செய்” என்று ஏவிக் கூறுவது

(அ) நேர் விடை (ஆ) ஏவல் விடை (இ) சுட்டுவிடை (ஈ) உறுவது கூறல் விடை

3. “நல்ல வரலாறுகளைப் படித்தால் தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும்”

– என்றவரைத் தேர்வு செய்க:

(அ) பேரறிஞர் அண்ணா (ஆ) திரு.வி.க (இ) அப்துல்கலாம் (ஈ) பாரதியார்

4. மடலி அல்லது வடலி என்பதனைக் குறிக்கும் பொருள் தேர்க:

(அ) தென்னையின் இளநிலை (ஆ) பனையின் இளநிலை

(இ) மாமரத்தின் இளநிலை (ஈ) பலா மரத்தின் இளநிலை

5. பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி:

மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்வதே இலக்கணம் எனப்படும். தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து வகைப்படும். உயிருக்கு முதன்மையானது காற்று, இயல்பாகக் காற்று வெளிப்படும் போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. “அ” முதல் “ஒள” வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன. மெய்யெழுத்துகள் பதினெட்டும் ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது. மெய் எழுத்துகள் ஒலிக்கம் கால் அளவு அரை மாத்திரை ஆகும். மெய் எழுத்துகள் பதினெட்டுடன் உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.

5. தமிழ் மொழியின் இலக்கண வகைகள் எத்தனை?

(அ) நான்கு (ஆ) ஏழு (இ) ஐந்து (ஈ) இரண்டு

6. உயிருக்கு முதன்மையானது எது?

(அ) காற்று (ஆ) அணிகலன் (இ) ஆடைகள் (ஈ) விளையாட்டுப் பொருட்கள்

7. உயிர் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) ஏழு (ஆ) பதினெட்டு (இ) பத்து (ஈ) பன்னிரண்டு

8. மெய்யெழுத்துகளை ஒலிக்கும் கால அளவு எவ்வளவு?

(அ) ஒரு மாத்திரை (ஆ) இரண்டு மாத்திரை (இ) அரை மாத்திரை (ஈ) ஒன்றரை மாத்திரை

9. உயிர்மெய் எழுத்துகளின் எண்ணிக்கை எவ்வளவு?

(அ) 216 (ஆ) 206 (இ) 18 (ஈ) 12

10. பொருத்தமான காலம் அமைத்தல்:

எதிர்காலம்.

(அ) உணவு உண்டவன் அயர்ந்து தூங்கினான்

(ஆ) மண்ணில், விண்ணில் ஆய்வுகள் நிகழ்கின்றன

(இ) மலை மீது ஏறுவேன்

(ஈ) மனிதன் நிலவில் சென்று வாழ நினைக்கிறான்

11. கீழ்கண்ட தொடர் எக்காலத்திற்கு உரியது?

“ஆய்வுகள் செய்து பார்க்கின்றான்”

(அ) முக்காலம் (ஆ) இறந்தகாலம் (இ) எதிர்காலம் (ஈ) நிகழ்காலம்

12. எந்த இரண்டு சொற்களை இணைத்தால் சரியான புதிய சொல் கிடைக்கும்?

(அ) கண் + அழகு – கண்ணழகு (ஆ) பண் + உண்டு – பண் உண்டு

(இ) கண் + உண்டு – கண் உண்டு (ஈ) விண் + உண்டு – விண் உண்டு

13. பொருளுக்கேற்ற வினை மரபை எழுதுக:

(அ) சோறு தின் (ஆ) சோறு சாப்பிடு (இ) சோறு உண் (ஈ) சோறு பருகு

14. எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:

(அ) உசிர் இருக்கிற வரைக்கும் தப்பு செய்ய மாட்டேன்

(ஆ) உயிர் இருக்கிற வரைக்கும் தப்பு செய்ய மாட்டேன்

(இ) உயிர் இருக்கும் வரை தவறு செய்ய மாட்டேன்

(ஈ) உசிர் இருக்கும் வரை தவறு செய்ய மாட்டேன்

15. பின்வருவனவற்றுள் எது சரியானது?

(பேச்சு வழக்கு)

(அ) அம்மா பசிக்குது. எனக்குச் சோறு வேணும் (ஆ) அம்மா பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும்.

(இ) அம்மா பசிக்குது. எனக்கு உணவு வேண்டும் (ஈ) அம்மா பசிக்கிறது எனக்கு சோறு வேணும்

16. நிறுத்தற்குறிகளை அறிதல்:

சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:

(அ) அந்தோ? பூனையின் காலில் அடிபட்டு விட்டதே!

(ஆ) அந்தோ! பூனையின் காலில் அடிபட்டு விட்டதே!

(இ) அந்தோ! பூனையின் காலில் அடிபட்டு விட்டதே

(ஈ) அந்தோ? பூனையின் காலில் அடிபட்டு விட்டதே.

17. நிறுத்தற்குறிகளை அறிதல்:

சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்டத் தொடரைக் கண்டறிக:

(அ) யாழினி, “நிலா நிலா ஓடி வா” எனப் பாடினாள்

(ஆ) யாழினி நிலா நிலா ஓடி வா எனப் பாடினாள்

(இ) யாழினி “நிலா, நிலா ஓடி வா” எனப் பாடினாள்?

(ஈ) யாழினி நிலா, நிலா ஓடி வா! எனப் பாடினாள்

18. சரியான கலைச் சொல்லால் பொருத்துக:

அ. Linguistics 1. எழுத்திலக்கணம்

ஆ. Phonology 2. மொழியியல்

இ. Journalism 3. ஒலியியல்

ஈ. Orthography 4. இதழியல்

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 3 2 1 4

இ. 4 1 2 3

ஈ. 3 2 4 1

19. கூற்று, காரணம் – எது சரி? எது தவறு?

கூற்று: பாடுதல், படித்தல் – தொழிற்பெயர்கள்.

காரணம் : ?

(அ) முன்னிலைக்கு மட்டும் உரியது (ஆ) படர்க்கைக்கே உரியது

(இ) படர்க்கைக்கு மட்டுமல்லாமல் முன்னிலைக்கும் உரியது (ஈ) மூவிடத்திற்கும் உரியது

20. குறில் நெடில் மாற்றம் அறிந்து, பொருள் வேறுபாடு சரியானதைக் கண்டறிக:

தொடு – தோடு

(அ) இயற்கை-செயற்கை (ஆ) வெகுளி-கோபம் (இ) கேண்மை-நட்பு (ஈ) தொடுதல்-அணிகலன்

21. சரியானவற்றைப் பொருத்துக:

அ. கார் காலம் 1. ஐப்பசி, கார்த்திகை

ஆ. குளிர் காலம் 2. மாசி, பங்குனி

இ. முன்பனிக்காலம் 3. ஆவணி, புரட்டாசி

ஈ. பின் பனிக்காலம் 4. மார்கழி, தை

அ ஆ இ ஈ

அ. 3 1 4 2

ஆ. 1 3 4 2

இ. 2 4 1 3

ஈ. 4 2 3 1

22. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் ———- என்று பெயர்.

(அ) பறவை (ஆ) பரவை (இ) பரதை (ஈ) பறப்பு

23. சொல் – பொருள் – பொருத்துக:

அ. தார் 1. மகிழ்ச்சி

ஆ. முனிவு 2. மாலை

இ. உவகை 3. உறவினர்

ஈ. தமர் 4. சினம்

அ ஆ இ ஈ

அ. 2 4 3 1

ஆ. 2 4 1 3

இ. 2 1 3 4

ஈ. 3 4 1 2

24. சரியான இணைப்புச் சொல்லைத் தேர்ந்தெடு:

மனிதர்களை நிலவிற்கு அனுப்புவோம் ——— நிலவிற்குச் செல்லத் தயாராக இருங்கள்.

(அ) எனவே (ஆ) ஏனெனில் (இ) ஆகையால் (ஈ) எனில்

25. பேச்சு வழக்கு : எழுத்து வழக்கு

(அ) பானை செய்தல் (ஆ) பானை முடைதல் (இ) பானை வனைதல் (ஈ) பானை கட்டுதல்

26. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

கூவல் என்று அழைக்கப்படுவது ———–

(அ) எதனால் (ஆ) எதற்கு (இ) எது (ஈ) எவை

27. சரியான ஊர் பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) கோவை-கோயம்புத்தூர் (ஆ) கும்பை-கும்பக்கோணம்

(இ) நெல்வேலி-திருநெல்வேலி (ஈ) புதுக்கோட்டை-புதுச்சேரி

28. ஒரு சொல் தரும் பல பொருள்கள் கண்டறிக:

“மா”

(அ) மாடம், மதி (ஆ) வானம், அளவு (இ) மரம், விலங்கு (ஈ) அம்மா, அறிவு

29. ஒரு பொருள் தரும் பல சொற்களை எழுதுக:

மலை

(அ) வெற்பு, சிலம்பு (ஆ) வனப்பு, பொருப்பு (இ) பொருப்பு, உயரம் (ஈ) மலைத்தல், பக்கமலை

30. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:

“Jungle”

(அ) சமவெளி (ஆ) சோலை (இ) காடு (ஈ) மலை

31. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“புதிய உரைநடை” என்னும் நூலுக்காக மா.இராமலிங்கம் சாகித்ய அகாதெமி பரிசு பெற்றார்.

(அ) புதிய உரைநடை என்பது எவ்வகையான நூல்?

(ஆ) “புதிய உரைநடை” என்னும் நூலுக்காக சாகித்ய அகாதெமி பரிசு பெற்றவர் யார்?

(இ) “சாகித்ய அகாதெமி” என்னும் விருது யாருக்கு வழங்கப்படுகிறது?

(ஈ) மா.இராமலிங்கம் பெற்ற பரிசு எவ்வகையானது?

32. கீழ்காண்பனவற்றுள் சரியான வினாக்களைத் தேர்ந்தெடுக்க:

தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது.

1. யாருடைய அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது?.

2.எதன் அன்பை எழுத உலகின் மொழிகள் போதாது?.

3. தாயின் அன்பை எழுத உலகின் மொழிகள் போதுமா?.

4. தாயின் அன்பை எழுத உலகில் மொழிகள் உண்டோ?

(அ) 2,4 சரி (ஆ) 2,3 சரி (இ) 1,3 சரி (ஈ) 4,1 சரி

33. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

மைதிலி உணவு உண்டாள்

(அ) செய்வினை (ஆ) செயப்பாட்டு வினை (இ) தன்வினை (ஈ) பிறவினை

34. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக: வணிகர் கடையைத் திறந்து வைத்தார்.

(அ) தன்வினை (ஆ) பிறவினை (இ) செய்வினை (ஈ) செயப்பாட்டு வினை

35. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

பரிதி ஊஞ்சலை ஆட்டுவித்தான்.

(அ) செய்வினை (ஆ) பிறவினை (இ) செயப்பாட்டு வினை (ஈ) தன்வினை

36. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“இந்தியா தான் என்னுடைய மோட்சம்” என்று பாரதியார் கூறுகிறார்.

(அ) பாரதியார் எதிர்பார்த்தது என்ன?

(ஆ) மோட்சம் என்று எதனைக் கூறலாம்?

(இ) “இந்தியா தான் என்னுடைய மோட்சம்” என்று கூறியவர் யார்?

(ஈ) பாரதியாரின் கனவு யாது?

37. வரைந்து –

வேர்ச்சொல்லை கண்டறி:

(அ) வரைதல் (ஆ) வரை (இ) வரைந்தான் (ஈ) வரைந்த

38. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்:

ரோபோ (Robot) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்.

(இ) இயந்திர மனிதன் (ஆ) கணினி மனிதன் (இ) தானியங்கி (ஈ) தனியாக செய்தல்

39. வழுவற்ற தொடரை கண்டறிக

(அ) ஞான பீட விருது (ஆ) ஞாண பீட விருது (இ) நாண பீட விருது (ஈ) நான பீட விருது

40. சந்திப் பிழையற்ற வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) ஒன்றை சொல்லுவதற்கென்றே இசைக்கபடும் இசைக்கவல்ல தாள கருவி பறை

(ஆ) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைகவல்ல தாள கருவிப் பறை

(இ) ஒன்றைச் சொல்லுவதற்கென்றே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாளக் கருவி பறை

(ஈ) ஒன்றைச் சொல்லுவதற்கென்ரே இசைக்கப்படும் இசைக்கவல்ல தாலக் கருபிப் பரை.

41. பிணி – எதிர்ச்சொல் தருக:

(அ) துன்பம் (ஆ) நோய் (இ) இன்பம் (ஈ) வறுமை

42. பிரித்தெழுதுதல்:

இடமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.

(அ) இடம் + மெல்லாம் (ஆ) இடம் + எல்லாம் (இ) இட + எல்லாம் (ஈ) இட + மெல்லாம்

43. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல் எழுதுக:

“Rhyme”

(அ) இயைபுத்தொடை (ஆ) மோனைத்தொடை (இ) எதுகைத் தொடை (ஈ) செந்தொடை

44. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

“வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன”

(அ) வாய்மையின் சிறந்த அறமாகக் கருதப்படுவது எது?

(ஆ) வாய்மை என்பது சிறந்த அறமா?

(இ) சங்க இலக்கியங்கள் சிறந்ததா?

(ஈ) வாய்மையைச் சிறந்த அறமாக எந்த இலக்கியங்கள் பேசுகின்றன?

45. வேர்ச்சொல்லின் தொழிற்பெயரைக் கூறு:

வாழ்

(அ) வாழந்த (ஆ) வாழ்ந்து (இ) வாழ்க்கை (ஈ) வாழா

46. வினா வகைகளைக் கண்டறி:

“வீட்டில் அரிசி இல்லை” “நீ கடைக்குச் செல்கிறாயா?” என்று அக்கா தம்பியிடம் வினவி வேலையைச் சொல்லுதல்.

(அ) ஐயவினா (ஆ) அறிவினா (இ) அறியாவினா (ஈ) ஏவல்வினா

47. மரபுத் தொடரின் பொருளை அறிக:

பச்சைப்பொய்

(அ) பேச்சில் பொய் (ஆ) உண்மையற்ற பொய் (இ) ஏமாற்றுதல் (ஈ) முற்றிலும் பொய்

48. பொருந்தாச் சொல்லை எழுத்தெழுதுக:

முதல்நிலைத் தொழிற்பெயர் அல்லாதது.

(அ) பெறு (ஆ) சுடு (இ) நடு (ஈ) வீடு

49. சரியான பொருளை அறிக:

அவிர்தல்

(அ) அழித்தல் (ஆ) நீக்குதல் (இ) ஒளிர்தல் (ஈ) உயர்தல்

50. சொல்வகை அறிந்து பொருந்தாச் சொல்லை எழுதுக:

(அ) சென்றாள் (ஆ) வந்த (இ) சித்திரை (ஈ) நடந்து

51. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) அரசர்கள் நல்லாட்சி செய்தார் (ஆ) பசு கன்மை ஈன்றன

(இ) மேகங்கள் சூழ்ந்து கொண்டது (ஈ) குழலி நடனம் ஆடினாள்

52. தவறான இணையைத் தேர்ந்தெடு

(அ) ஊட்டி-உதக மண்டலம் (ஆ) நாகை-நாகப்பட்டினம்

(இ) உதகை-உதக மண்டலம் (ஈ) மயிலை-மயிலாடுதுறை

53. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு

(அ) இம்சை-இடறல் (ஆ) இம்சை-இன்பம் (இ) இம்சை-துன்பம் (ஈ) இம்சை-இழிவு

54. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) கிரீடம்-மணியழகு (ஆ) கிரீடம்-மணிமுடி (இ) கிரீடம்-பொன் (ஈ) கிரீடம்-மணி

55. அயோத்திதாசர் நடத்திய வார இதழினைத் தேர்ந்தெடுக்க:

(அ) ஒரு பைசாத் தமிழன் (ஆ) இரண்டு பைசாத் தமிழன்

(இ) காலணாத் தமிழன் (ஈ) அரையணாத் தமிழன்

56. “தந்தை மகனை நன்றாகப் படிக்க வைத்தார்”.

எவ்வகையான தொடர்?

(அ) தன்வினைத் தொடர் (ஆ) பிறவினைத் தொடர்

(இ) உணர்ச்சித் தொடர் (ஈ) கட்டளைத் தொடர்

57. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிதல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) ஆஸ்தி-செல்வம் (ஆ) ஆஸ்தி-சொத்து (இ) ஆஸ்தி-பணம் (ஈ) ஆஸ்தி-வருமானம்

58. சரியான தொடரை அறிக:

(அ) பசுக் குவியல் மேய்ந்து சென்ற (ஆ) பழக்கொத்துக் காய்த்துத் தொங்கியது

(இ) தென்னந்தோப்பில் தேங்காய்கள் கிடந்தன (ஈ) ஆட்டுக் கூட்டத்தைப் பட்டியில் அடைத்தனர்

59. பொருளைத் தேர்ந்தெடு:

“கல்லில் நார் உரித்தல்”

(அ) ஆராய்ந்து பாராமல் செய்தல் (ஆ) இருப்பது போல் தோன்றும்; ஆனால் இருக்காது

(இ) இயலாத காரியம் (ஈ) நீண்ட காலமாக இருப்பது

60. சரியான வினாச்சொல்லைத் தேர்ந்தெடு:

கண்ணி என்பதன் விளக்கம் ———-

(அ) யாது (ஆ) எவை (இ) யாவை (ஈ) எது

61. பொருத்தமான காலம் அமைத்தல்:

“அப்துல் கலாமின் சுய சரிதையை நான் படிப்பேன்”

(அ) இறந்தகாலம் (ஆ) எதிர்காலம் (இ) நிகழ்காலம் (ஈ) வசந்த காலம்

62. நிறுத்தற்குறிகளை அறிதல்:

சரியான நிறுத்தற்குறிகள் இடப்பட்ட தொடரைக் கண்டுபிடிக்க:

(அ) இல்ல சார், அவனை விடக் கூடாது சார் என்றான்

(ஆ) இல்ல சார்! அவனை விடக்கூடாது சார் என்றான்?

(இ) “இல்ல சார், அவனை விடக்கூடாது சார்!” என்றான்

(ஈ) ‘இல்ல சார் அவனை விடக்கூடாது சார் என்றான்!

63. ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக: புதுக்கோட்டை

(அ) புதுவை (ஆ) புதுகை (இ) புதுமை (ஈ) புதூர்

64. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான தொடரைத் தேர்ந்தெடு

(அ) குமரன் உணவு உண்டான் (இறந்தகாலம்) (ஆ) குமரன் உணவு உண்பான் (நிகழ்காலம்)

(இ) குமரன் உணவு உண்கிறான் (எதிர்காலம்) (ஈ) குமரன் உணவு உண்ணச் செல்கிறான் (எதிர்காலம்)

65. எழுத்து வழக்குத் தொடரைக் கண்டறிக:

(அ) பேரன் பேத்தியோட சந்தோசமா இருக்கேன்

(ஆ) பெயரன் பெயர்த்தி உடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்

(இ) பேயரன் பேத்தி உடன் சந்தோசமாக இருக்கேன்

(ஈ) பேரன் பெயர்த்தி உடன் மகிழ்ச்சியாக இருக்கேன்

66. நிறுத்தற் குறிகளை அறிதல்:

சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான போன்றவை குறிப்பிடத்தக்கவை

(அ) சேரர்களின், பட்டப்பெயர்களில், கொல்லி வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை

(ஆ) சேரர்களின் பட்டப்பெயர்களில் கொல்லி, வெற்பன், மலையமான் போன்றவை குறிப்பிடத்தக்கவை

(இ) சேரர்களின் பட்டப்பெயர்களில், கொல்லி, வெற்பன் மலையமான், போன்றவை குறிப்பிடத்தக்கவை

(ஈ) சேரர்களின், பட்டப்பெயர்களில் கொல்லி, வெற்பன் மலையமான போன்றவை குறிப்பிடத்தக்கவை

67. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:

Cultural Values

(அ) பண்பாட்டு எல்லைகள் (ஆ) பண்பாட்டு நிகழ்ச்சிகள்

(இ) பண்பாட்டு விழுமியங்கள் (ஈ) பண்பாட்டு ஆதாரங்கள்

68. கலைச்சொல்லைப் பொருத்துக:

அ. Classical Literature 1. நவீன இலக்கியம்

ஆ. Devotional Literature 2. நாட்டுப்புற இலக்கியம்

இ. Folk Literature 3. செவ்விலக்கியம்

ஈ. Modern Literature 4. பக்தி இலக்கியம்

அ ஆ இ ஈ

அ 2 1 3 4

ஆ. 3 4 2 1

இ. 3 2 4 1

ஈ. 2 3 1 4

69. இருபொருள் தருக:

தாமம்

(அ) குணம், தகுதி (ஆ) அழுதல், பின்னுதல் (இ) கயிறு, பூமாலை (ஈ) கீற்று, கயிறு

70. சரியான இணையைத் தேர்ந்தெடு:

மெய்

(அ) பொருள், உடல் (ஆ) உண்மை, மாலை (இ) உண்மை, உடல் (ஈ) உடல், வலிமை

71. சரியான இணையைத் தேர்ந்தெடு:

பரவை

(அ) வேழம், கடல் (ஆ) ஞானம், இசை (இ) ஊர், ஆழி (ஈ) இசை, கடல்

72. ஒருமை பன்மை பிழையுள்ள தொடரைக் குறிப்பிடுக:

(அ) காட்டில் மாடுகள் மேய்ந்தன (ஆ) சோலையில் மான் துள்ளி விளையாடியது

(இ) ஓர் அணில் மரத்தில் தாவி ஓடின (ஈ) பூச்செடியில் பூ மலர்ந்திருந்தது

73. ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?

(அ) பெண்கள் எல்லாத் துறையிலும் பணிபுரிகின்றான்

(ஆ) பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றன

(இ) பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றது

(ஈ) பெண்கள் எல்லாத்துறையிலும் பணிபுரிகின்றனர்

74. பிழை திருத்துதல்:

(ஒரு-ஓர்)

கீழ்காணும் தொடர்களில் ஒரு – ஓர் சரியாக அமைந்த தொடர் எது?

(அ) அது ஒரு இனிய பாடல் (ஆ) அஃது ஒரு இனிய பாடல்

(இ) அது ஒரு பழைய பாடல் (ஈ) அது ஓர் பழைய பாடல்

75. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான காலத்தை தேர்ந்தெடு

(அ) கடந்துச் சென்றான் (இறந்தகாலம்) (ஆ) கடந்துச் செல்வான் (நிகழ்காலம்)

(இ) கடந்துச் செல்கிறான் (இறந்தகாலம்) (ஈ) கடந்துச் செல்லச் செய்வான் (நிகழ்காலம்)

76. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(இயற்கை)

(அ) நாம் ———– உரங்கள் தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்

(ஆ) நாம் ——— உரங்கள் தவிர்த்து நில வளம் காப்போம்

(இ) நாம் உரங்கள் ———— தயாரித்து உழவர்களுக்கு வழங்க வேண்டும்

(ஈ) ———- உரங்கள் உழவர்களுக்குத் தயாரித்து நாம் வழங்க வேண்டும்

77. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:

(ஒலி மரபு) – பசு

(அ) கதறும் (ஆ உறுமும் (இ) கத்தும் (ஈ) பிளிறும்

78. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்:

(ஒலி மரபு) – யானை

(அ) உறுமும் (ஆ) கதறும் (இ) பிளிறும் (ஈ) முழங்கும்

79. ஒரு பொருள் தரும் இரு சொற்கள் தருக:

கோ

(அ) ஆ, பசு (ஆ) வேந்தன், அரசன் (இ) பாடல், பண் (ஈ) இசை, புகழ்

80. பொருள் வேறுபாடறிந்து எழுதுக:

போரில் பயன்படுத்தியது ——–

(அ) வால் (ஆ) வாழ் (இ) வாள் (ஈ) வான்

81. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்ந்தெடு:

கண்ணனை ———- அடித்துச் சென்றது

(அ) வெல்லம் (ஆ) வெள்ளம் (இ) வெழ்ழம் (ஈ) பள்ளம்

82. பொருள் வேறுபாடு அறிந்து பொருத்துக:

அ. இலை 1. மெலிந்து போதல்

ஆ. இளை 2. நூல் இழை

இ. இழை 3. செடியின் இலை

ஈ. கழை 4. மூங்கில்

அ ஆ இ ஈ

அ. 1 3 2 4

ஆ. 3 1 2 4

இ. 3 2 4 1

ஈ. 2 4 1 3

83. தப்பாட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது.

விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

(அ) தப்பாட்டம் என்றால் என்ன?

(ஆ) பல்வேறு ஆட்டக்கூறுகள் யாவை?

(இ) தப்பாட்டம் எவ்வகையான சூழலில் ஆடப்படும்?

(ஈ) எந்த ஆட்டம் நிகழ்த்தப்படும் சூழலுக்கேற்ப பல்வேறு ஆட்டக்கூறுகளைக் கொண்டுள்ளது?

84. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை எழுதுக:

“Tempest”

(அ) பெருங்காற்று (ஆ) நிலக்காற்று (இ) கடற்காற்று (ஈ) சுழல்காற்று

85. சரியான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) உதக மண்டலம்-உதவை (ஆ) கோயம்புத்தூர்-கோயவை

(இ) திருநெல்வேலி-நெல்லை (ஈ) சைதாப்பேட்டை-சைதா

86. உவமைகளால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்:

“விழலுக்கு இறைத்த நீர் போல”

– உவமை கூறும் பொருளைக் கூறுக

(அ) எதிர்பாரா நிகழ்வு (ஆ) பயனற்ற செயல் (இ) தற்செயல் நிகழ்வு (ஈ) வெளிப்படைத் தன்மை

87. செய்வினைத் தொடரைக் கண்டறிக:

(அ) குமுதா பாடாதே (ஆ) குமுதா பாடி மகிழ்ந்தாள்

(இ) குமுதாவால் பாடப்பட்டது (ஈ) குமுதா பாடி மகிழ்வித்தாள்

88. வேர்ச்சொல்லில் தொழிற் பெயர் காண்க:

“பெறு”

(அ) பெற்றவன் (ஆ) பெற்ற (இ) பெற்று (ஈ) பெறுதல்

89. சேர்த்தெழுதுதல்:

தூக்கி + கொண்டு

(அ) தூக்கிக்கொண்டு (ஆ) தூக்குக்கொண்டு (இ) தூக்கிக் கொண்டு (ஈ) தூக்கு கொண்டு

90. எறிந்தான் – வேர்ச்சொல்லைத் தருக:

(அ) எறிந்த (ஆ) எறிதல் (இ) எறி (ஈ) எறிந்து

91. வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் காண்:

“பொறு”

(அ) பொறுத்தவர் (ஆ) பொறுத்தல் (இ) பொறுத்து (ஈ) பொறுத்தார்

92. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லை அறிதல்:

காலிங்பெல் (Calling Bell) என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

(அ) மணியடிதல் (ஆ) ஒலித்தல் (இ) அழைத்தல் (ஈ) அழைப்பு மணி

93. சேர்த்தெழுதுதல்:

விழித்து + எழும்

(அ) விழியெழும் (ஆ) விழித்தெழும் (இ) விழித்தழும் (ஈ) விழித்து எழும்

94. இருவினைகளில் பொருள் வேறுபாடு அறிக:

நெற்கதிர்கள் ———– நிலத்தில், கரும்பு ————னர்

(அ) விளைத்த, விளைந்த (ஆ) விலைந்த, விளைத்த

(இ) விளைந்த, விளைவித்தனர் (ஈ) விளைத்த, விலைந்த

95. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

சேர்ந்து – சேர்த்து

(அ) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்த்து வைத்தனர்

(ஆ) சுற்றத்தார் சேர்த்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனையியரைச் சேர்த்து வைத்தனர்

(இ) சுற்றத்தார் சேர்ந்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்ந்து வைத்தனர்

(ஈ) சுற்றத்தார் சேர்த்து வாழ்ந்தனர். பிரிந்திருந்த கணவன் மனைவியரைச் சேர்ந்து வைத்தனர்

96. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

மாறு – மாற்று

(அ) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதுமாற்று வழிகாட்டி மாற்றினார்.

(ஆ) மறைமலை அடிகள், அனைவரும் தூய தமிழில் எழுதுமாறு வழிகாட்டி மாறினார்.

(இ) மறைமலை அடிகள் அனைவரும் தூய தமிழில் எழுதுமாறு வழிகாட்டி மாற்றினார்.

(ஈ) மறைமலை அடிகள் அனைவரும் தூய தமிழில் எழுதுமாற்று வழிகாட்டி மாற்றினார்.

97. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) உந்து, உரு, ஊழி, ஊண் (ஆ) உரு, ஊழி, ஊழ், உந்து

(இ) ஊழி, ஊழ், உந்து, உரு (ஈ) உந்து, ஊழி, உரு, ஊழ்

98. அகர வரிசையில் எழுதுக:

(அ) ஒழுக்கம், உயி;ர், ஆடு, அலை (ஆ) முந்நீர், மனத்துயர், மீமிசை, மேடுபள்ளம்

(இ) உயிர், ஒழுக்கம், அலை, ஆடு (ஈ) அலை, ஆடு, உயிர், ஒழுக்கம்

99. அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) மாளாத வாளால் ஆளா மீளா (ஆ) ஆளா மீளா மாளாத வாளால்

(இ) ஆளா மாளாத மீளா வாளால் (ஈ) வாளால் ஆளா மீளா மாளாத

100. திணை வழுவை தேர்வு செய்க:

(அ) செழியன் வந்தது (ஆ) செழியன் வந்தார்

(இ) செழியன் வருவார் (ஈ) செழியன் வந்தான்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.