19-03-2022 TNPSC

CHEMIST IN TAMIL NADU INDUSTRIES SUBORDINATE SERVICE

1. எவன்+ ஒருவன் என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்.

(அ) எவன் ஒருவன் (ஆ) எவன்னொருவன்

(இ) எவனொருவன் (ஈ) என்னொருவன்

2. உயர்வு + அடைவோம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.

(அ) உயர்வடைவோம் (ஆ) உயர்அடைவோம்

(இ) உயர்வுவடைவோம் (ஈ) உயர்வு அடைவோம்

3. பிரித்தெழுதுதல்:

“வேதியுரங்கள்” என்னும் சொல்லைப் பிரித்தெழுதுக:

(அ) வேதி + யுரங்கள் (ஆ) வேதி + உரங்கள்

(இ) வேத் + உரங்கள் (ஈ) வேதியு + ரங்கள்

4. எதிர்ச்சொல் எழுத்தெழுதுதல்:

எளிது

(அ) அரிது (ஆ) சிறிது (இ) பெரிது (ஈ) வறிது

5. சொல்லும் பொருளும் பொருந்தாத இணை எது?

(அ) கொம்பு-கிளை (ஆ) புழை-துளை (இ) கான்-காட்சி (ஈ) அசும்பு-நிலம்

6. பொருந்தாத இணை எது?

(அ) சூழி-தலை (ஆ) குழை-காது (இ) கிண்கிணி-இடை (ஈ) சுட்டி-நெற்றி

7. பொருந்தாத இணை எது?

(அ) குறிஞ்சி-யாமம் (ஆ) முல்லை-எற்பாடு

(இ) மருதம்-வைகறை (ஈ) பாலை-நண்பகல்

8. பொருந்தாத இணையைக் காண்க:

(அ) சாஸ்தி-மிகுதி (ஆ) விஸ்தாரம்-அளவு

(இ) பொக்கிஷம்-செல்வம் (ஈ) நமஸ்காரம்-வணக்கம்

9. வழுஉச் சொல் இல்லாத தொடரை எழுதுக:

(அ) அதைச் செய்தது நான் அன்று (ஆ) அதைச் செய்தது நான் அல்லேன்

(இ) அதைச் செய்தது நான் அல்ல (ஈ) அதைச் செய்தது நான் அல்லர்

10. ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ் சொல்லில் சரியானதைக் குறிப்பிடுக:

(அ) Vowel – மெய்யெழுத்து (ஆ) Consonant – ஆய்தஎழுத்து

(இ) Homograph – ஒப்பெழுத்து (ஈ) Discussion – உயிரெழுத்து

11. ஆங்கிலச் சொல்லுக்கான தமிழ்ச்சொல் பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) Storm – புயல் (ஆ) Tempest – சுழல்காற்று

(இ) Tornado – சூறாவளி (ஈ) Sea Breeze – கடற்காற்று

12. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிவு செய்க:

வானம்-வாணம்

(அ) ஆகாயம்-வெட்டவெளி (ஆ) பட்டாசு-ஆகாயம்

(இ) வெடி-ஆகாயம் (ஈ) ஆகாயம்-வெடி

13. தொடர் அமைப்பினை கண்டறிக:

“பாடி மகிழ்ந்தனர்”

(அ) வினையெச்சத்தொடர் (ஆ) பெயரெச்சத்தொடர்

(இ) வினைமுற்றுத்தொடர் (ஈ) வேற்றுமைத்தொடர்

14. “கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது”

– தொடரில் இடம் பெற்றுள்ள தொழிற்-பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.

(அ) பாடிய,கேட்டவர் (ஆ) பாடல், கேட்டவர்

(அ) கேட்டவர், பாடிய (ஈ) பாடல், பாடிய

15. சரியான அகர வரிசைச் சொற்களைத் தேர்வு செய்க:

(அ) பானம், பிடி, புலி, பௌவம், பசி (ஆ) பசி,பானம்,பிடி,புலி,பௌவம்

(இ) பசி, பிடி, பானம், பௌவம், புலி (ஈ) பௌவம், பசி, பானம், புலி, பிடி

16. சரியான அகர வரிசையை எழுதுக:

(அ) தூவி, துன்பம், தீவு, தாவி, தண்ணீர் (ஆ) துன்பம், தூவி, தீவு, தாவி, தண்ணீர்

(இ) தூவி, தீவு, துன்பம், தண்ணீர், தாவி (ஈ) தண்ணீர், தாவி, தீவு, துன்பம், தூவி

17. அகர வரிசைப்படுத்தி எழுதுக:

நீலம், மாணிக்கம், வைரம், பவளம், முத்து

(அ) நீலம், பவளம், மாணிக்கம், முத்து, வைரம்

(ஆ) மாணிக்கம், பவளம், முத்து, வைரம், நீலம்

(இ) பவளம், முத்து, மாணிக்கம், நீலம், வைரம்

(ஈ) முத்து, பவளம், மாணிக்கம், நீலம், வைரம்

18. சொற்களை ஒழுங்குபடுத்துக:

ஜப்பானில் உருவாக்கிய பெப்பர் இயந்திர மனிதனே சாப்ட் வங்கி.

(அ) ஜப்பானில் இயந்திர மனிதனே உருவாக்கிய சாப்ட் வங்கி பெப்பர்

(ஆ) ஜப்பானில் உருவாக்கிய சாப்ட் வங்கி இயந்திர மனிதனே பெப்பர்

(இ) ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே பெப்பர்

(ஈ) பெப்பர், ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய இயந்திர மனிதனே

19. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) தொகுதி; துள்ளி; தேடல்; தானியம் (ஆ) தேடல்; தானியம்; தொகுதி; துள்ளி

(இ) துள்ளி; தொகுதி; தேடல்; தானியம் (ஈ) தானியம்; துள்ளி; தேடல்; தொகுதி

20. விடை வகையைச் சுட்டுக.

“நீ தேர்வு எழுதவில்லையா?” என்ற வினாவிற்குக் “கை வலிக்கிறது” என்று கூறுவது

(அ) உற்றது உரைத்தல் (ஆ) உறுவது கூறல் (இ) இனமொழி (ஈ) சுட்டு விடை

21. உவமையால் விளக்கப் பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்.

எலியும் பூனையும் போல

– உவமை கூறும் பொருள் கூறுக:

(அ) ஒற்றுமை (ஆ) வேற்றுமை (இ) ஏமாற்றம் 9ஈ) நட்பு

22. “இலவு காத்த கிளி போல”

என்ற சொற்றொடரில் உவமை விளக்கும் பொருள்?

(அ) ஏமாற்றம் (ஆ) தோல்வி (இ) காவல் (ஈ) நன்மை

23. உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெழுதுதல்: “பசுமரத்தாணி போல”

(அ) பயனற்ற செயல் (ஆ) எளிதில் மனத்தில் பதிதல்

(இ) எதிர்பாரா நிகழ்வு (ஈ) தற்செயல் நிகழ்வு

24. சரியான கலைச்சொல்லைத் தேர்ந்தெடு:

Reform

(அ) விழிப்புணர்வு (ஆ) சீருடை (இ) சீர்திருத்தம் (ஈ) விண்ணப்பம்

25. “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்குக் “கட்டுரை எழுதத் தெரியும்” என்று விடை கூறுவது, ————– விடை ஆகும்.

(அ) வினா எதிர் வினாதல் விடை (ஆ) நேர் விடை

(இ) இனமொழி விடை (ஈ) உறுவது கூறல் விடை

26. நிறுத்தற்குறி அறிக (எது சரியானது)

(அ) கண்ணா வா. அதோ, அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்

(ஆ) “கண்ணா வா அதோ அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்”

(இ) கண்ணா, வா! அதோ! அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்

(ஈ) கண்ணா வா அதோ அங்குள்ள துணி ஓவியங்களைப் பார்ப்போம்

27. நிறுத்தற்குறி அறிக. (எது சரியானது)

(அ) வீடு கட்டியாயிற்று? (ஆ) “சட்டி உடைந்து போயிற்று”

(இ) பணம் காணாமல் போனது! (ஈ) ஓவியம் குமரனால் வரையப்பட்டது

28. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று:

“எனக்குக்கூட ஓங்கள மாரி ஆடணுமுன்னு ஆசை”

(அ) எனக்குக் கூட உங்கள மாரி ஆடவேண்டும் என்று ஆசை

(ஆ) எனக்குக் கூட உங்களை மாரி ஆடவேண்டும் என்று ஆசை

(இ) எனக்குக் கூட உங்களைப் போல் ஆடவேண்டுமென்று ஆசை

(ஈ) எனக்குக் கூடஉங்களை மேரி ஆடவேண்டும் என்று ஆசை

29. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்று.

குடுத்துடு

(அ) கொடு (ஆ) குடுத்து விடு (இ) குடித்து விடு (ஈ) கொடுத்து விடு

30. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு.

அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர் —————?

(அ) யார்? (ஆ) என்ன? (இ) எப்படி? (ஈ) எவ்வாறு?

31. எவ்வகை வினா என்பதை எழுதுக:

மாணவரிடம், “இந்த கவிதையின் பொருள் யாது? என்று ஆசிரியர் மாணவரிடம் கேட்டல்

(அ) அறியாவ வினா (ஆ) ஐய வினா (இ) கொடை வினா (ஈ) அறி வினா

32. காட்சியழகு – காட்சி + ய் + அழகு.

பின்வருவனவற்றுள் தொடர்புபடுத்துக:

(அ) ஈகார ஈறு (ஆ) ஐகார ஈறு (இ) ஆகார ஈறு (ஈ) இகர ஈறு

33. சரியான இணையைத் தேர்ந்தெடு:

(அ) உயிர் + உயிர் – மலை + அருவி (ஆ) மெய் + மெய் – தமிழ் + அன்னை

(இ) உயிர் + உயிர் – தென்னை + மரம் (ஈ) மெய் + உயிர் – தேன் + மழை

34. குறில் நெடில் மாற்றம், பொருள் வேறுபாடறிந்து சரியான இணையைத் தெரிக:

கொள் – கோள்

(அ) புறங் கூறல் – வாங்கு (ஆ) புறங் கூறல் – கிரகம்

(இ) கொல்லுதல்- கிரகம் (ஈ) வாங்கு – புறங்கூறல்

35. குறில் – நெடில் பிழையான சொல் எது?

(அ) கல்-கால் (ஆ) கிரி-கீரி (இ) குடம்-கூடம் (ஈ) கெண்டை-கொண்டை

36. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று 1: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக்காஞ்சி, காஞ்சி என்றால் நிலையாமை என்பது பொருள்.

கூற்று 2: மதுரைக் காஞ்சியைப் பாடியவர் மாங்குடி மருதனார்.

(அ) கூற்று இரண்டும் தவறு (ஆ) கூற்று 1 மட்டும் சரி

(இ) கூற்று இரண்டும் சரி (ஈ) கூற்று 2 மட்டும் சரி

37. கூற்று, காரணம் – சரியா? தவறா?

கூற்று: ண,ன,ந – இவை மூன்றும் மயங்கொலி எழுத்துகள்

காரணம்: உச்சரிப்பில் சிறிதளவு மட்டுமே பொருள் வேறுபாடும் உடையது.

(அ) கூற்று:சரி: காரணம்:சரி (ஆ) கூற்று:சரி;காரணம்: சரி

(இ) கூற்று:தவறு காரணம்:சரி (ஈ) கூற்று:தவறு காரணம் :தவறு

38. கல்லாமை ஒழிக எனும் பொருளில் வரும் தொடர்?

(அ) செய்தித் தொடர் (ஆ) வினாத்தொடர்

(இ) விழைவுத்தொடர் (ஈ) உணர்ச்சித் தொடர்

39. நேரான தமிழ்ச்சொல் அறிக:

டெரகோட்டா

(அ) மரச்சிற்பம் (ஆ) ஒற்றைக் கற்சிற்பம்

(இ) சுடுமண் சிற்பம் (ஈ) மெழுகுச் சிற்பம்

40. பொருளின் செறிவை சுட்டுக:

(அ) அகமும் புறமும் (ஆ) உற்றார் உறவினர்

(இ) காலை மாலை (ஈ) கன்னங்கரேல்

41. சொல்லும் பொருளும் – பொச்சாப்பு

(அ) தற்சார்பு (ஆ) சோர்வு (இ) பொறாமை (ஈ) பொறுமை

42. குமரிவட்டத்தில் “உப்பர்” என்பது யாரைக் குறிக்கும்?

(அ) உறவினர் (ஆ) உப்பளம் (இ) அப்பா (ஈ) தாத்தா

43. பிழை திருத்துதல்

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓரூர் (ஆ) ஓர் ஊர் (இ) ஒன்று ஊர் (ஈ) ஒரு ஊர்

44. பிழை திருத்துதல்

சரியான பதிலை தேர்ந்தெடு.

(அ) ஓர் நகரம் (ஆ) ஓரிரு நகரம் (இ) ஒரு நகரம் (ஈ) ஒன்று நகரம்

45. சொல்லையும், பொருளையும் பொருத்துக:

அ. ஓப்புமை 1. மேகம்

ஆ. அற்புதம் 2. வள்ளல்

இ. முகில் 3. வியப்பு

ஈ. உபகாரி 4. இணை

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 1 2 3 4

இ. 3 2 1 4

ஈ. 2 3 4 1

46. கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்குரிய சரியான விடையைத் தேர்ந்தெடு:

இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் அடர்த்தியான சிக்கலான ஒரு பொருள் எதுவென்றால் அது மனித மூளைதான் என்று சொல்கிறார்கள். அதனுள் இருக்கும் செல்களில் எண்ணிக்கை ட்ரில்லியன். அவற்றில் நூறு பில்லியன் அதாவது பத்தாயிரம் கோடி நியூரான்கள் உள்ளன. இந்த நியூரான்களின் வலை பின்னல்தான் படைப்பு உணர்ச்சி, ஞாபகம், தன்னுணர்வு ஆகியன எல்லாம். மூளை முதுகு தண்டில் இருந்து முளைக்கிறது. தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக முட்டைகோஸ் இலைகள் போல உள்ளது. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு 800 மி.லி. குருதி தேவைப்படுகிறது. சிறுமூளை தான் நம் உடலின் அசைவுகளையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்துகிறது.

46. இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சிக்கலான ஒரு பொருள் எது?

(அ) செல்கள் (ஆ) நியூரான்கள் (இ) மனித மூளை (ஈ) வலைபின்னல்

47. மனித மூளையில் இருக்கும் செல்களின் எண்ணிக்கையைக் கூறு?

(அ) டிரில்லியன் (ஆ) நூறு பில்லியன் (இ) பத்தாயிரம் (ஈ) கோடி

48. மூளை எங்கிருந்து முளைக்கிறது?

(அ) தலையில் (ஆ) குருதியில் (இ) முதுகுதண்டில் (ஈ) நியூரான்களில்

49. மூளைக்கு ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு குருதி தேவைப்படுகிறது?

(அ) டிரில்லியன்.மி.லி (ஆ) 100 மி.லி (இ) 1000 மி.லி (ஈ) 800 மி.லி

50. நம் உடலின் அசைவுகளைக் கட்டுப்படுத்துவது எது?

(அ) உள்மூளை (ஆ) சிறுமூளை (இ) நடுமூளை (ஈ) பின்மூளை

51. சேர்த்தெழுதுக:

இவை + எல்லாம்

(அ) இவை எல்லாம் (ஆ) இவையெல்லாம் (இ) இவயெல்லாம் (ஈ) இதுயெல்லாம்

52. என்றென்றும் – பிரித்தெழுதுக:

(அ) என்+ றென்றும் (ஆ) என்று + என்றும்

(இ) என்றும் + என்றும் (ஈ) என் + என்றும்

53. தாம் + இனி என்பதனைச் சோத்தெழுதக் கிடைக்கும் சொல்.

(அ) தாம்இனி (ஆ) தாம்மினி (இ) தாமினி (ஈ) தாமனி

54. இன்று + ஆகி என்பதனைச் சேர்ந்தெழுதக் கிடைக்கும் சொல்

(அ) இன்றுஆகி (ஆ) இன்றிஆகி (இ) இன்றாகி (ஈ) இன்றாஆகி

55. “புரவலர்” என்பதன் எதிர்ச்சொல்லை எழுதுக:

(அ) இறப்பவர் (ஆ) கொடுப்பவர் (இ) இரவலர் (ஈ) இரவுக்காவலர்

56. பொருந்தாத இணையைக் கண்டறிக:

(அ) கிழக்கு-கொண்டல் (ஆ) மேற்கு-கோடை

(இ) வடக்கு-குணக்கு (ஈ) தெற்கு-தென்றல்

57. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

ஆண்பாற் பிள்ளைத் தமிழ் பருவத்தில்

அல்லாததை கண்டறிக

(அ) காப்பு (ஆ) செங்கீரை (இ) அம்புலி (ஈ) கழங்கு

58. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

பெண்பாற் பிள்ளைத்தமிழுக்குப் பொருந்தாத

பருவத்தைக் கண்டறிக

(அ) கழங்கு (ஆ) அம்மானை (இ) சிறுதேர் (ஈ) ஊசல்

59. பொருந்தா இணையைக் கண்டறிக:

(அ) ஆரி-அருமை (ஆ) இறடி-திணை (இ) அல்கி-தங்கி (ஈ) படுகர்-மேடு

60. சந்திப்பிழையற்ற தொடரை அறிக:

(அ) நெகிழிபையை புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

(ஆ) நெகிழிப்பையை புறகணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

(இ) நெகிழிபையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

(ஈ) நெகிழிப்பையைப் புறக்கணிப்போம்; நெடுநாள் வாழ்வோம்

61. மரபுப் பிழையற்ற காய்களின் இளமைப் பெயர் காண்க.

(அ) வாழைக்காய் (ஆ) கத்திரிப்பிஞ்சு (இ) மாம்பிஞ்சு (ஈ) அவரைக்காய்

62. மரபு வழுவை காண்க:

(அ) மயில் அகவும் (ஆ) குயில் கத்தும்

(இ) கோழி கொக்கரிக்கும் (ஈ) கிளி கீச்சிடும்

63. மரபுப் பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) மயில் அகவும் (ஆ) காகம் கத்தும் (இ) கோழி கூவும் (ஈ) புறா குழறும்

64. சந்திப்பிழையை நீக்குக:

(அ) உலகப் பெரும் புகழைப் பெற்றுத் தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(ஆ) உலக பெரும் புகழைப் பெற்று தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(இ) உலக பெரும் புகழை பெற்று தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

(ஈ) உலகப் பெரும் புகழை பெற்றுத்தந்த சிறந்த நூல் திருவள்ளுவரின் திருக்குறள்

65. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான சொல்லைத் தேர்வு செய்க:

உண்டாக்குதல்

(அ) விலை (ஆ) விளை (இ) விழை (ஈ) விடை

66. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

பார்

(அ) உலகம், கடல் (ஆ) உலகம், மேதினி

(இ) கடல், பார்த்தல் (ஈ) ஆர்கலி, புவனம்

67. ஒரு பொருள் தரும் பல சொற்கள்:

சொல்லுதல்

(அ) மொழிதல், வாசித்தல் (ஆ) செப்புதல், கூறல்

(இ) உரைத்தல், கேட்டல் (ஈ) விளம்புதல், கவனித்தல்

68. “உண்” என்னும் வேர்ச் சொல்லின் பதம் அறிக:

(அ) கற்பனை (ஆ) உண்டாள் (இ) கடித்தான் (ஈ) சிரிப்பு

69. “ஆடினான்” – வேர்ச்சொல்லைத் தருக:

(அ) போ (ஆ) சிரி (இ) ஓடு (ஈ) ஆடு

70. சரியான அகர வரிசையை எழுதுக:

(அ) கரம், கானகம், கீற்று, கொண்டை, கோட்டை

(ஆ) கொண்டை, கோட்டை, கானகம், கரம், கீற்று

(இ) கோட்டை, கரம், கானகம், கீற்று, கொண்டை

(ஈ) கரம், கொண்டை, கோட்டை, கீற்று, கானகம்

71. அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:

(அ) வகுப்பு, வானம், விழி, வெற்றி, வேள்வி (ஆ) விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம்

(இ) வானம், விழி, வெற்றி, வேள்வி, வகுப்பு (ஈ) வெற்றி, வேள்வி, வகுப்பு, வானம், விழி

72. அகர வரிசையில் எழுதுக:

வணிகம், துறைமுகம், பொருள்கள், முதலீடு

(அ) துறைமுகம், பொருள்கள், முதலீடு, வணிகம்

(ஆ) பொருள்கள், வணிகம், முதலீடு, துறைமுகம்

(இ) முதலீடு, பொருள்கள், வணிகம், துறைமுகம்

(ஈ) துறைமுகம், வணிகம், பொருள்கள், முதலீடு

73. கீழ்க்காணும் சொற்களை அகர வரிசைப்படி எழுதுக:

சுத்தி, சிற்பம், சொட்டு, சங்கு

(அ) சிற்பம், சுத்தி, சங்கு, சொட்டு (ஆ) சொட்டு, சங்கு, சுத்தி, சிற்பம்

(இ) சங்கு, சிற்பம், சுத்தி. சொட்டு (ஈ) சுத்தி, சங்கு, சொட்டு, சிற்பம்

74. விடை வகைகள் “கால் பந்து விளையாடுவாயா?” என்ற வினாவிற்குக் “கைப்பந்து விளையாடுவேன்” என்பது எவ்வகை விடை?

(அ) இனமொழி விடை (ஆ) நேர் விடை

(இ) மறை விடை (ஈ) வினாவெதிர் வினாதல் விடை

75. விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

”மன்னுஞ் சிலம்பே!

மணிமேகலை வடிவவே!”

(அ) காப்பியங்கள் எத்தனை?

(ஆ) ஐம்பெருங்காப்பியங்கள் யாவை?

(இ) ஐஞ்சிறுகாப்பியங்கள் யாவை?

(ஈ) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது எது?

76. “என்னுடன் ஊருக்கு வருவாயா? என்ற வினாவிற்கு” வராமல் இருப்பேனா? என்று கூறுவது எவ்வகை விடை?

(அ) உற்றது உரைத்தல் விடை (ஆ) உறுவது கூறல் விடை

(இ) வினா எதிர் வினாதல் விடை (ஈ) இன மொழி விடை

77. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:

“பள்ளிக்கு புத்தகங்கள் வருவித்தார்”

(அ) தன்வினை (ஆ) பிறவினை

(இ) செய்வினை (ஈ) செயப்பாட்டு வினை

78. எவ்வகை வாக்கியம் எனக் கண்டெழுதுக:

“வீடு கட்டியாயிற்று”

(அ) தன்வினை (ஆ) பிறவினை (இ) செய்வினை (ஈ) செயப்பாட்டு வினை

79. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைக் கண்டறிக:

பொருத்துக:

அ. Creator 1. குகை ஓவியங்கள்

ஆ. Artist 2. படைப்பாளர்

இ. Cartoon 3. கலைஞர்

ஈ. Cave paintings 4. கருத்துப்படம்

அ ஆ இ ஈ

அ. 1 2 3 4

ஆ. 4 3 2 1

இ. 2 3 4 1

ஈ. 1 4 2 3

80. பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொல்லைக் கண்டறிக:

விஷம்

(அ) விடம் (ஆ) நஞ்சு (இ) அமுது (ஈ) இனிப்பு

81. இலக்கண நெறியிலிருந்து பிறழ்ந்து சிதைந்து வழங்கும் சொல்

(அ) குடந்தை (ஆ) நீலகிரி (இ) மதுரை (ஈ) திருச்சி

82. கீழ்க்காணும் ஊர் பெயர்களில் தவறான மரூஉவை எழுதுக:

(அ) மன்னார் – மன்னார்குடி (ஆ) கோவை – கோயம்புத்தூர்

(இ) அரிவை – அரியலூர் (ஈ) கும்பை – கும்பகோணம்

83. சரியான சொல் எது?

கோழி – என்பதன் இளமைப்பெயர் என்ன?

(அ) குட்டி (ஆ) குருளை (இ) குஞ்சு (ஈ) பிள்ளை

84. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கல்.

நாவாய் என்பதன் சரியான சொல்

(அ) இறை (ஆ) நிலவு (இ) தலைவன் (ஈ) படகு

85. பொருத்தமான காலத்தைச் சுட்டுக:

மகாகவி சுப்ரமணிய பாரதியார், “நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா” என்று பாராட்டப் பெற்றவர்

(அ) இறந்தகாலம் (ஆ) நிகழ்காலம் (இ) எதிர்காலம் (ஈ) வருங்காலம்

86. பொருத்தமான காலம் அமைத்தல்:

சரியான இணையைத் தேர்ந்தெடு

(அ) கண்ணன் வந்தான் – இறந்தகாலம் (ஆ) கண்ணன் வருவான் – நிகழ்காலம்

(இ) கண்ணன் வருகிறான் – எதிர்காலம் (ஈ) கண்ணன் வருகின்றான் – எதிர்காலம்

87. சரியான மரபுத் தொடர்களை தேர்வு செய்க:

(அ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை போட்டனர்

(ஆ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை கட்டினர்

(இ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை முடுக்கினர்

(ஈ) இல்லத்தின் அருகே புதிதாகக் கூரை வேய்ந்தனர்

88. அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்க்க:

(கவிழும்)

(அ) மலைமுகட்டில் மேகம் ———- (ஆ) காலை ஒளியினில் மலரிதழ் ————

(இ) சோலைப் பூவினில் வண்டினம் ——- (ஈ) இயற்கையின் இன்பம் ————-

89. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு:

நகை

(அ) பொன்னகை, அணிகலன் (ஆ) புன்னகை, சிரிப்பு

(இ) நகைப்பு, உவகை (ஈ) புன்னகை, பொன்னகை

90. இரு பொருள் தரும் இணையைத் தேர்ந்தெடு:

செய்

(அ) நன்றேசெய், இன்றேசெய் (ஆ) நன்செய், புன்செய்

(இ) செயலைச் செய், வயல் நிலம் (ஈ) நஞ்சை நிலம், புஞ்சை நிலம்

91. கலைச்சொல் அறிதல்:

Lexicon சரியான கலைச் சொல்லை கண்டுபிடி.

(அ) அகராதி (ஆ) சதுரகராதி (இ) பேரகராதி (ஈ) தமிழகராதி

92. சரியான கலைச்சொல் அறிதல்:

அ. Moral 1. குழந்தைத் தொழிலாளர்

ஆ. Guidance 2. ஒழுக்கம்

இ. Discipline 3. நீதி

ஈ. Child Labour 4. வழிகாட்டுதல்

அ ஆ இ ஈ

அ. 3 4 2 1

ஆ. 4 3 1 2

இ. 1 2 3 4

ஈ. 2 4 1 3

93. மரபுப் பிழைகள்:

புலி ———– சரியான சொல்

(அ) குட்டி (ஆ) பறழ் (இ) குருளை (ஈ) கன்று

94. “அவசரக்குடுக்கை”

– சொல்லின் பொருள் தருக:

(அ) எண்ணிச் செயல்படுதல் (ஆ) எண்ணித் துணிதல்

(இ) எண்ணிச் செயல்படாமை (ஈ) விரைந்து செயல்படுதல்

95. சொற்களின் கூட்டுப் பெயர்கள் – சரியானதைத் தேர்ந்தெடு:

கம்பு

(அ) கம்பு தோட்டம் (ஆ) கம்பங் கொல்லை

(இ) கம்பங் குவியல் (ஈ) கம்பந் தோட்டம்

96. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்.

(அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தல்.

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது

(இ) எட்டு பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது.

(ஈ) பட்டிமன்றம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது.

97. சரியான தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

(அ) வல்லினம் இடங்கள் மிகும், மிகா அறிந்து பயன்படுத்த வேண்டும்

(ஆ) மிகும், மிகா இடங்கள் வல்லினம் அறிந்து பயன்படுத்த வேண்டும்

(இ) வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள் அறிந்து பயன்படுத்த வேண்டும்

(ஈ) பயன்படுத்த வேண்டும் வல்லினம் மிகும் இடங்கள், மிகா இடங்கள்

98. பொருத்துக:

சொல் பொருள்

அ. தேசம் 1. வழி

ஆ. நெறி 2. நாடு

இ. மாசற 3. அறிஞர்கள்

ஈ. மேதைகள் 4. குற்றம் இல்லாமல்

அ ஆ இ ஈ

அ. 2 1 4 3

ஆ. 4 3 2 1

இ. 3 1 4 2

ஈ. 1 3 2 4

99. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றன.

(ஆ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கின்றார்கள்

(இ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம பறக்கின்றது

(ஈ) பறவைகள் கண்டம் விட்டு கண்டம் பறக்கிறார்

100. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) மாணவர்கள் வியந்து நிற்கின்றான் (ஆ) மாணவர்கள் வியந்து நிற்கின்றன.

(இ) மாணவர்கள் வியந்து நிற்கின்றது (ஈ) மாணவர்கள் வியந்து நிற்கின்றனர்

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.