05-11-2022 TNPSC

Tnpsc Assistant Director Exam Previous Questions Answer Key 2022 – General Tamil And General Studies in Tamil

1. பிரித்தெழுதுக:

பொய்யகற்றும்

(அ) பொய் அகற்றும் (ஆ) பொய் கற்றும் (இ) பொய்யகற்றும் (ஈ) பொய் யகற்றும்

2. பிரித்தெழுதுதல்:

செந்தமிழ் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது

(அ) செந்+தமிழ் (ஆ) செம்+தமிழ் (இ) சென்மை+தமிழ் (ஈ) செம்மை+தமிழ்

3. சேர்த்தெழுதுதல்:

எட்டு+திசை

(அ) எட்டி இசை (ஆ) எட்டு திசை (இ) எட்டிசை (ஈ) எட்டுத்திசை

4. அருகுற

எதிர்சொல்லைக் கண்டறி:

(அ) அருகில் (ஆ) தொலைவில் (இ) அண்மையில் (ஈ) பக்கத்தில்

5. “அணுகு”

– என்பதன் எதிர்ச்சொல் எழுதுக:

(அ) அருகில் (ஆ) விலகு (இ) தொலைவு (ஈ) பருகு

6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

உயர்திணைக்குரியதல்லாத பால்வகைக் கண்டறிக:

(அ) ஆண்பால் (ஆ) பெண்பால் (இ) பலவின்பால் (ஈ) பலர்பால்

7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக:

கொழுந்து வகை அல்லாததைக் கண்டறிக:

(அ) கீரைத்தண்டு (ஆ) வேப்பங்கொழுந்து (இ) பனங்குருத்து (ஈ) நெல் துளிர்

8. பின்வருவனவற்றுள் தவறான செய்தியைத் தரும் தொடர்:

(அ) அரிக்கமேடு அகழாய்வில் ரோமானிய நாணயங்கள் கிடைத்தன.

(ஆ) புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூலிலும் ஏறுகோள் குறித்துக் கூறப்பட்டுள்ளது

(இ) எட்டு, பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது

(ஈ) பட்டிமண்டபம் பற்றிய குறிப்பு மணிமேகலையில் காணப்படுகிறது

9. மரபு பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) சோறு சாப்பிட்டான் (ஆ) பால் குடித்தான் (இ) அம்பு விட்டான் (ஈ) கூடை முடைந்தான்

10. மரபு பிழையற்றதை எடுத்து எழுதுக:

(அ) எருது எக்காளமிடும் (ஆ) கோழி கூவும் (இ) மயில் அலறும் (ஈ) காகம் கத்தும்

11. மரபு தொடரின் பொருளைக் கண்டறிக:

கொடி கட்டிப் பறத்தல்.

(அ) கொடியைக் கட்டுதல் (ஆ) புகழ்பெற்று விளங்குதல்

(இ) பறக்க நினைத்தல் (ஈ) ஆசைப்படுதல்

12. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:

Continent – என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்

(அ) கண்டம் (ஆ) வலசை (இ) வானிலை (ஈ) புகலிடம்

13. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை அறிதல்:

“Conversation”

(அ) உரையாடல் (ஆ) கலந்துரையாடல் (இ) சொற்பொழிவு (ஈ) பட்டிமன்றம்

14. ஆங்கிலச்சொல்லுக்கு நேரான தமிழ்ச்சொல்லை எழுதுக:

“Orthography”

(அ) சொல்லிலக்கணம் (ஆ) எழுத்திலக்கணம்

(இ) பொருளிலக்கணம் (ஈ) யாப்பிலக்கணம்

15. பிறமொழிச் சொற்கள் கலவாத தொடரைக் கண்டறி:

(அ) கம்ப்யூட்டர் துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

(ஆ) கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்

(இ) அனுபவமே சிறந்த ஆசான்

(ஈ) எவ்வகையான செயற்கைக்கோளையும் ஏவும் திறன் நம்மிடம் உள்ளது.

16. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

உடலின் உறுப்பு

(அ) தளை (ஆ) தலை (இ) தழை (ஈ) கழை

17. ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளையறிதல்:

அறிவுப்பகுதி

(அ) கலை (ஆ) களை (இ) கழை (ஈ) தழை

18. ஒரு பொருள் தரும் பல சொற்கள் “ஈ” என்பதன் தவறான பொருளைத் தேர்ந்தெடுக்க:

(அ) உயிரெழுத்து (ஆ) ஒரு வகை பறவை (இ) அணிகலன் (ஈ) பகிர்ந்து கொடு

19. ஒலி பொருள் தரும் பல சொற்கள்:

வடு,மூசு,குரும்பை,கச்சல் ஆகிய சொற்கள் எதனைக் குறிக்கும்?

(அ) பிஞ்சு வகை (ஆ) காய் வகை (இ) கனி வகை (ஈ) குலை வகை

20. ஒலி பொருள் தரும் பல சொற்கள்:

“வயல்”

(அ) பழனம், செய் (ஆ) காணி, கனல் (இ) தரிசு, தீ (ஈ) சுடர், கழனி

21. “கேட்டான்” என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறி:

(அ) கேல் (ஆ) கேள் (இ) கேட் (ஈ) கேட்டு

22. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க:

“பாடு”

(அ) பாடினான் (ஆ) பாடுவான் (இ) பாடுகிறான் (ஈ) பாடுதல்

23. பார் என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் தருக

(அ) பார்த்து (ஆ) பார்த்த (இ) பார்த்தான் (ஈ) பார்த்தது

24. வேர்ச்சொல்லின் தொழிற்பெயர் காண்க:

“படி”

(அ) படித்தான் (ஆ) படித்தல் (இ) படிப்பாள் (ஈ) படிக்கிறான்

25. “MIGRATION” என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல்லைத் தேர்க:

(அ) வலசை (ஆ) வானிலை (இ) நகர்தல் (ஈ) புகலிடம்

26. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) நாக்கு,நைடதம், நொய்யல், நோன்பு (ஆ) நைடதம்,நாக்கு,நொய்யல்,நோன்பு

(இ) நோன்பு,நைடதம்,நாக்கு,நொய்யல் (ஈ) நொய்யல்,நோன்பு,நைடதம்,நாக்கு

27. அகரவரிசைப்படி சொற்களை சீர் செய்க:

(அ) சோலை,சுறும்பு,சாந்தம்,சைலம் (ஆ) சுறும்பு,சாந்தம்,சைலம்,சோலை

(இ) சாந்தம்,சுறும்பு,சைலம்,சோலை (ஈ) சைலம்,சோலை,சுறும்பு,சாந்தம்

28. சொற்களை ஒழுங்குபடுத்துக:

ஆடுபவரின் கரகச் செம்பின் தலையில் நன்கு படியும்படி உட்புறமாகத் தட்டி அடிப்பாகத்தை செய்கின்றனர்

(அ) நன்கு படியும்படி ஆடபவரின் தலையில் உட்புறமாகத் தட்டி கரகச் செம்பின் அடிப்பாகத்தைச் செய்கின்றனர்

(ஆ) கரகச் செம்பின் உட்புறமாகத் தட்டி அடிப்பாகத்தை ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படிச் செய்கின்றனர்

(இ) ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படி உட்புறமாகத் தட்டி கரகச் செம்பின் அடிப்பாகத்தை செய்கின்றனர்

(ஈ) கரகச் செம்பின் அடிப்பாகத்தை உட்புறமாகத் தட்டி ஆடுபவரின் தலையில் நன்கு படியும்படிச் செய்கின்றனர்

29. சொற்களை ஒழுங்குபடுத்துக:

ஆட்சிக்கு அரசனின் அறம்கூறும் துணை புரிந்தன அறநெறி மன்றங்கள்

(அ) அறம்கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

(ஆ) அறம்கூறும் அரசனின் ஆட்சிக்கு அறநெறி மன்றங்கள் துணை புரிந்தன

(இ) அறம்கூறும் அரசனின் ஆட்சிக்கு அறநெறி மன்றங்கள் துணை புரிந்தன

(ஈ) அரசனின் ஆட்சிக்கு துணை புரிந்தன அறம்கூறும் அறநெறி மன்றங்கள்

30. சொற்களை ஒழுங்குபடுத்துக:

பறிக்கப்பட்ட பரந்து நின்ற என் மனம் மலரைப்போல மரக்கிளையிலிருந்து வாடுகிறது

(அ) என் மனம் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து பறிக்கப்பட்ட மலரைப்போல வாடுகிறது.

(ஆ) பரந்து நின்ற என் மனம் பறிக்கப்பட்ட மரக்கிளையிலிருந்து மலரைப்போல வாடுகிறது

(இ) பரந்து நின்ற என் மனம் பறிக்கப்பட்ட மலரைப்போல மரக்கிளையிலிருந்து வாடுகிறது

(ஈ) என் மனம் பறிக்கப்பட்ட மலரைப் போல் பரந்து நின்ற மரக்கிளையிலிருந்து வாடுகிறது

31. விடை வகைகள்:

பள்ளிக்கூடம் எங்குள்ளது? என்ற வினாவிற்கு வலப்பக்கத்தில் உள்ளது எனக் கூறல் எவ்வகை விடை?

(அ) சுட்டு விடை (ஆ) நேர் விடை (இ) மறை விடை (ஈ) ஏவல் விடை

32. “உனக்குக் கதை எழுதத் தெரியுமா?” என்ற வினாவிற்கு “கட்டுரை எழுதத் தெரியும்” என்று விடை கூறுவது

(அ) இனமொழி விடை (ஆ) ஏவல் விடை

(இ) உறுவது கூறல் விடை (ஈ) உற்றது உரைத்தல் விடை

33. காமராசர் நகர் எங்கே இருக்கிறது? ஏன்ற வினாவிற்கு, “இந்த வழியாகச் செல்லுங்கள்” என்று விடையளிப்பது

(அ) நேர் விடை (ஆ) சுட்டுவிடை (இ) மறை விடை (ஈ) உற்றது உரைத்தல் விடை

34. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுத்து எழுதுக:

பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் “இலா”

(அ) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

(ஆ) யாது பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்

(இ) உரையாடு மென்பொருள் இலா பாரத ஸ்டேட் வங்கியில் எதற்காக பயன்படுகிறது?

(ஈ) பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் என்ன?

35. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடுக்க:

பூங்கொடி தன் தோழியுடன் திங்கட்கிழமை காலையில் பேருந்தில் ஏறிப் பள்ளிக்குச் சென்றாள்

(அ) பூங்கொடி பள்ளிக்கு யாருடன் சென்றாள்?

(ஆ) பூங்கொடி பள்ளிக்கு எப்படிச் சென்றாள்?

(இ) பூங்கொடி பள்ளிக்கு எத்தனை பேருடன் சென்றாள்?

(ஈ) பூங்கொடி எப்பொழுது பள்ளிக்குச் சென்றாள்?

36. சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஆகிய மூன்று விடைகளை எவ்வாறு அழைப்பர்?

(அ) மறைமுக விடைகள் (ஆ) வெளிப்படை விடைகள்

(இ) குறிப்பு விடைகள் (ஈ) நேரெதிர் விடைகள்

37. செய்வினை, செயப்பாட்டு வினை வாக்கியங்களைக் கண்டெழுதுதல்:

குமரன் ஓவியம் வரைந்தான்

(அ) செய்வினை வாக்கியம் (ஆ) செயப்பாட்டு வினை வாக்கியம்

(இ) வினை முற்று வாக்கியம் (ஈ) பிறவினை வாக்கியம்

38. பிறவினை சொற்றொடரைக் கண்டறிக:

(அ) கபிலனைத் திருந்தச் செய்தான் (ஆ) கபிலன் திருந்தினான்

(இ) கபிலன் திருந்துவான் (ஈ) கபிலன் திருந்துவானா?

39. வாக்கிய அமைப்பினைக் கண்டறிக:

தமிழ்ப்பற்று தமிழறிஞர்களால் வளர்க்கப்பட்டது

(அ) செய்வினை (ஆ) செயப்பாட்டு வினை `(இ) தன்வினை (ஈ) பிறவினை

40. “இடி விழுந்த மரம் போல” – இவ்வுவமை கூறும் பொருள் விளக்கம்

(அ) துன்பம் (ஆ) முறிதல் (இ) அழிதல் (ஈ) கருகுதல்

41. “எம்பளம்” என்பது

(அ) அடையாளம் (ஆ) குறியீடு (இ) சின்னம் (ஈ) வரைபடம்

42. ”Territory” இணையான தமிழ் சொல் அறிக:

(அ) நீர்ப்பகுதி (ஆ) கண்டப்பகுதி (இ) நிலப்பகுதி (ஈ) பனிப்பிரதேசம்

43. அலுவல் சார்ந்த கலைச்சொற்களை கண்டறிக:

(அ) Conical Stone-குமிழிக்கல் (ஆ) Irrigation technology-பாசனத்தொழில் நுட்பம்

(இ) Video Conference- காணொலிக் கூட்டம் (ஈ) Tropical Zone-வெப்ப மண்டலம்

44. விடை வகைகள்:

“கடைக்குப் போவாயா” என்ற கேள்விக்குப் “போகமாட்டேன்” என மறுத்துக் கூறல்

(அ) ஏவல் விடை (ஆ) வினா எதிர் வினாதல் விடை (இ) நேர் விடை (ஈ) மறை விடை

45. பிறமொழிச் சொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல்லை எழுது:

ப்ளாக்போர்டு

(அ) கரும்பலகை (ஆ) வெண்பலகை (இ) பலகை (ஈ) கருந்தரை

46. இதில் தவறான இணை எது?

(அ) கோல்டு பிஸ்கட்-தங்கக்கட்டி (ஆ) ரிப்பீட்-மிகுதியாக

(இ) ஈக்வலாக-சமமாக (ஈ) யூஸ்-பயன்படுத்தல்

47. ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல் அறிக:

Adulteration

(அ) கடற்பயணம் (ஆ) பயணப் படகுகள் (இ) தொழில் முனைவோர் (ஈ) கலப்படம்

48. தவறான ஊர்ப்பெயரின் மரூஉவை எழுதுக:

(அ) தஞ்சை-தஞ்சாவூர் (ஆ) நெல்லை-திருநெல்வேலி

(இ) மயிலை-மயிலாடுதுறை (ஈ) புதுகை-புதுக்கோட்டை

49. மரூஉச் சொல் சரியான இணை(களைக்) கண்டறிக:

1.சைதை-சைதாப்பேட்டை.

2.கும்பை-கும்பகோணம்.

3. மயிலை-மயிலாப்பூர்.

4.நெல்லை-திருநெல்வேலி

(அ) 1,2 சரி (ஆ) 3 மட்டும் சரி (இ) 1,3,4 சரி (ஈ) 2,4 சரி

50. மரூஉச்சொல் – சரியாகப் பொருத்துக:

(அ) சைதை 1. நாகப்பட்டிணம்.

(ஆ) புதுகை 2. புதுக்கோட்டை.

(இ) புதுவை 3. புதுச்சேரி.

(ஈ) நாகை 4.சைதாப்பேட்டை

அ ஆ இ ஈ

அ. 4 2 3 1

ஆ. 4 3 2 1

இ. 1 2 3 4

ஈ. 2 4 3 1

51. நிறுத்தற்குறி அறிக: (எது சரியானது)

(அ) கூட்டத்தில் தலைவர் “சக்தி அவர்கள் இப்போது தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

(ஆ) கூட்டத்தில் தலைவர் சக்தி அவர்கள் இப்போது “தலைப்பில்லை” என்னும் தலைப்பில் பேசுவார் என்று அறிவித்தார்

(இ) கூட்டத்தில் தலைவர் “சக்தி அவர்கள் இப்போது ‘தலைப்பில்லை” என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

(ஈ) கூட்டத்தில் தலைவர் “சக்தி” அவர்கள் இப்போது “தலைப்பில்லை என்னும் தலைப்பில் பேசுவார்” என்று அறிவித்தார்

52. சரியான நிறுத்தற்குறிகளுடன் அமைந்த வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்: மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர,சோழ,பாண்டியர் பொதுவாகப் பாடுகிறது.

(ஆ) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்; மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர,சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது

(இ) “வெண்பா”வால் எழுதப்பட்ட நூல் ‘முத்தொள்ளாயிரம்’. மன்னர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் சேர,சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது

(ஈ) “வெண்பா”வால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம். சேர,சோழ, பாண்டியர் என்று பொதுவாகப் பாடுகிறது

53. சரியான நிறுத்தற்குறிகளையுடைய வாக்கியத்தைக் கண்டறிக:

(அ) நல்லவை வெல்லும், தீயவைத் தோற்கும். (ஆ) நல்லவை வெல்லும்! தீயவைத் தோற்கும்!!

(இ) நல்லவை வெல்லும். தீயவைத் தோற்கும். (ஈ) நல்லவை வெல்லும்; தீயவைத் தோற்கும்.

54. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு:

பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமைந்த சொல் எது?

(அ) சொல்லு (ஆ) சொல் (இ) சொல்லிக்கினு (ஈ) சொல்றா

55. பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு:

பின்வருவனவற்றுள் எழுத்து வழக்கில் அமையாத சொல்லைக் கண்டறிக:

(அ) செல்க (ஆ) வருக (இ) குந்திக்க (ஈ) படித்தான்

56. சரியான எழுத்து வழக்குத் தொடரினை தெரிந்தெடு:

(அ) நேற்று நீ வந்தியா? (ஆ) நேற்று நீ வருவாயா?

(இ) நேற்று அவன் வருவானா? (ஈ) நேற்று நீ வந்தாயா?

57. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு:

சிங்கம் – சரியான சொல்

(அ) பறழ் (ஆ) குருளை (இ) குட்டி (ஈ) கன்று

58. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு:

பசு – சரியான சொல்

(அ) கன்று (ஆ) குட்டி (இ) பறழ் (ஈ) குருளை

59. சொற்களை இணைத்து புதிய சொல் உருவாக்கு:

சுவர் – சரியான சொல்

(அ) கட்டினான் (ஆ) அமைத்தான் (இ) உண்டாக்கினான் (ஈ) எழுப்பினான்

60. பொருத்தமான காலம் கண்டறிக:

(அ) நான் வந்தேன் (எதிர்காலம்) (ஆ) கவிதை இயற்றினாள் (இறந்தகாலம்)

(இ) மேடையில் பேசுவேன் (நிகழ்காலம்) (ஈ) மழை பெய்தது (எதிர்காலம்)

61. நிகழ்காலத்தைக் குறிப்பது:

(அ) நடந்தாள் (ஆ) நடந்திருந்தாள் (இ) நடக்கிறது (ஈ) நடந்தது

62. பொருத்தமான காலம் அமைத்தல்:

சிரி என்ற வேர்ச்சொல்லின் எதிர்காலத்தைக் கண்டுபிடி

(அ) சிரித்தாள் (ஆ) சிரிக்கிறாள் (இ) சிரிப்பாள் (ஈ) சிரிக்கவில்லை

63. சரியான வினாச் சொல்லை இட்டு எழுது:

நெல்லையப்பர் கோவில் ——- உள்ளது?

(அ) எது (ஆ) யாவை (இ) எங்கு (ஈ) என்ன

64. சரியான வினாச் சொல்லைத் தேர்ந்தெடு:

அறிநெறிச் சாரம் பாடலை எழுதியவர் ———-?

(அ) எவ்வாறு (ஆ) எப்படி (இ) ஏன் (ஈ) யார்

65. சரியான வினாச் சொல்லை இட்டு நிரப்புக:

தீ விபத்து ஏற்பட்டால் செய்யக் கூடாதவை —–?

(அ) எவை (ஆ) ஏன் (இ) எப்படி (ஈ) யாவை

66. மீனாட்சி சுந்தரனார் நல்ல தமிழில் பேசி விளக்கும் திறமைப் பெற்றிருந்தார் ——– அவருடைய மாணாக்கர்கள் அவரிடம் கற்பதனை மிகவும் விரும்பினார்கள்.

(அ) மற்றும் (ஆ) ஆகையால் (இ) அவை போல (ஈ) அது போல

67. சரியான இணைப்புச் சொல்லினைத் தேர்ந்தெடு.

மாபெரும் புத்தகக் கண்காட்சி காமராசர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

புத்தக் கண்காட்சி ———- நடைபெறுகிறது

(அ) எங்கு (ஆ) ஏன் (இ) எதற்காக (ஈ) எவ்வாறு

68. கீழ்கண்டவற்றில் சரியான இணைப்புச் சொல்லினை தேர்ந்தெடு:

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்

கலம்தீமை யால் திரிந்து அற்று.

தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும். நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும்

(அ) ஏனெனில் (ஆ) அது போல (இ) ஆகையால் (ஈ) அதனால்

69. இவற்றுள் எது சரியானது?

இரு பொருள் : ஆக்குதல்

(அ) யாக்கை, உடம்பு (ஆ) செய்தல், சமைத்தல்

(இ) சோறு, உண்டாக்குதல் (ஈ) உணவு, பருகுதல்

70. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க:

(மதலை)

(அ) ஏணி சாத்திய ——– (ஆ) வானம் ஊன்றிய ——–

(இ) இரவில் மாட்டிய ——- (ஈ) கானம் பாடிய ——–

71. அடைப்புக்குள் உள்ள சொல்லை தகுந்த இடத்தில் சேர்க்க:

(தனது)

(அ) தலைவர் ——– கையால் பரிசு வழங்கினார்

(ஆ) மாணவன் ——- கையால் பெற்றுக்கொண்டான்

(இ) மாடுகள் ——- தலையை ஆட்டின

(ஈ) தலைவர் ——- வீட்டை வழங்கினார்

72. சால,உறு,தவ,நனி,கூர்,கழி – என்ற ஆறு சொற்களும் ஒரே பொருளைத் தரும் அவற்றைக் கண்டறிக

(அ) விரைவு (ஆ) புதுமை (இ) மிகுதி (ஈ) சிறப்பு

73. உயர்ந்தோங்குமலை – இத்தொடரில் ஒரு பொருளுக்கு இரு சொற்கள் உள்ளன. அவற்றைத் தேர்ந்தெடு:

(அ) ஓங்கு, மலை (ஆ) உயர், ஓங்கு (இ) உயர்,மலை (ஈ) மலை, உயர்

74. நகை என்னும் சொல் தரும் இருபொருள் குறிப்பிடுக:

(அ) ஊர், துறைமுகம் (ஆ) புன்னகை, கரை

(இ) சிரிப்பு, அணிகலன் (ஈ) கேலி, உறக்கம்

75. குறில் நெடில் பொருள் வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:

பாரி-பரி

(அ) தலைவன்-கழுதை (ஆ) வீரன்-பரித்துக்கொள் (இ) வள்ளல்-குதிரை (ஈ) மாரி-குதிரை

76. கூற்று: மாலுமிகள் கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும், கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து, தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்

காரணம்: மாலுமிகளின் அனுபவ அறிவு கப்பல்களைச் செலுத்த உதவுகிறது

(அ) கூற்று. காரணம் இரண்டும் சரி (ஆ) கூற்று சரி; காரணம் தவறு

(இ) கூற், காரணம் இரண்டும் தவறு (ஈ) கூற்று தவறு; காரணம் சரி

77. கலைச்சொல் தருக:

Homograph

(அ) உயிரெழுத்து (ஆ) ஒப்பெழுத்து (இ) ஒரு மொழி (ஈ) மெய்யெழுத்து

78. கலைச்சொல் தருக:

Cosmic Ray

(அ) விண்வெளிக் கதிர்கள் (ஆ) பால்வீதி மண்டலம்

(இ) புறஊதாக் கதிர்கள் (ஈ) விண் எறிக்கல்

79. கலைச்சொற்களை அறிதல்:

நூல்

(அ) Thread (ஆ) Loom (இ) Tanning (ஈ) Factory

80. “யாண்டு” என்னும் சொல்லின் பொருளினை எழுதுக:

(அ) எனது (ஆ) எங்கே (இ) எவ்வளவு (ஈ) எது

81. பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல்:

(அ) ஈன்று 1. கிளை

(ஆ) கொம்பு 2. மிகுந்த சுவை.

(இ) அதிமதுரம் 3. கவி

(ஈ) குரங்கு 4.பெற்று

அ ஆ இ ஈ

அ. 2 3 4 1

ஆ. 4 3 2 1

இ. 4 1 2 3

ஈ. 1 2 4 3

82. தகுந்த சொல்லைத் தேர்ந்து எழுதுக:

வீட்டுப் பயன்பாட்டிற்காகப் பொருள் வாங்குபவர்

(அ) நுகர்வோர் (ஆ) முதலீட்டாளர் (இ) தொழிலாளி (ஈ) நெசவாளி

83. பின்வருவனவற்றைப் பொருத்தி விடை அறிக:

(அ) ஆ 1. குவியல்

(ஆ) ஆடு 2.கற்றை

(இ) ஒளி 3.மந்தை

(ஈ) கல் 4.நிரை

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 4 3 2 1

இ. 3 4 2 1

ஈ. 3 2 1 4

84. கட்டளைத் தொடரைக் கண்டறிக:

(அ) அப்துல் நேற்று வந்தான் (ஆ) அப்துல் நேற்று வருவித்தான்

(இ) இது நாற்காலி (ஈ) பூக்களைப் பறிக்காதீர்

85. இவ்வரிகளில் உள்ள பொருள்கோளை கண்டறிக:

“ஆலத்துமேல குவளை குளத்துள

வாலின் நெடிய குரங்கு”

(அ) நிரல்நிறைப் பொருள்கோள் (ஆ) தாப்பிசைப் பொருள்கோள்

(இ) கொண்டு கூட்டுப் பொருள்கோள் (ஈ) ஆற்றுநீர் பொருள்கோள்

86. “விருந்தினரும் வறியவரும்

நெறுங்கி யுண்ண

மேன்மேலும் முகமலரும் மேலோர்

போல”

– என்று விருந்தைப் பற்றி கூறும் நூலைக் கண்டிடுக:

(அ) பொருநராற்றுப்படை (ஆ) கலிங்கத்துப்பரணி

(இ) தக்கயாகப்பரணி (ஈ) சிறுபாணாற்றுப்படை

87. பிழை திருத்துதல்:

(ஒரு-ஓர்) – (ஒரு-ஓர் சரியாக அமைந்த தொடரைத் தேர்ந்தெடுக்க)

(அ) ஒரு அழகிய சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(ஆ) ஓர் அழகயி சிற்றூரில் ஓர் குளம் இருந்தது

(இ) ஓர் அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

(ஈ) ஒரு அழகிய சிற்றூரில் ஒரு குளம் இருந்தது

88. சரியான தொடரைத் தேர்ந்தெடு:

(அ) அருந்தும் அருமருந்தென உணவே நம் தமிழ் மக்கள் அறிந்தவர்

(ஆ) நம் தமிழ்மக்கள் அருமருநதென அருந்தும் உணவே அறிந்தவர்

(இ) அருந்தும் உணவே அருமருந்தென அறிந்தவர் நம் தமிழ்மக்கள்

(ஈ) நம் உணவே அருமருந்தென அறிந்தவர் அருந்தும் தமிழ்மக்கள்

89. பிழையை திருத்தி எழுது

(அ) ஓர் புத்தகம் (ஆ) ஒரு புத்தகம் (இ) ஒன்று புத்தகம் (ஈ) ஒன்றின் புத்தகம்

90. சொல் – பொருள் – பொருத்துக:

அ. வாரணம் 1. பாக்கு

ஆ. சூரன் 2. குதிரை

இ. பரி 3. வீரன்

ஈ.கமுகு 4. யானை

அ ஆ இ ஈ

அ. 4 3 1 2

ஆ. 3 1 4 2

இ. 3 1 2 4

ஈ. 4 3 2 1

91. சொல் – பொருள் – பொருத்துக:

சரியான சொல்லையும், பொருளையும் தேர்ந்தெடு

(அ) வருக்கை-இருக்கை (ஆ) புள்-தாவரம் (இ) அள்ளல்-சேறு (ஈ) மடிவு-தொடக்கம்

92. பொருத்துக:

சொல் பொருள்

அ. கழனி 1. கப்பல்

ஆ. சமர் 2. கடல்

இ. கலம் 3. போர்

ஈ. ஆழி 4. வயல்

அ ஆ இ ஈ

அ. 3 1 2 4

ஆ. 4 3 1 2

இ. 2 4 1 3

ஈ. 1 3 4 2

93. ஒருமை பன்மை பிழையற்ற தொடர் எது?

(அ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தனர்

(ஆ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தன

(இ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தார்

(ஈ) ஈஸ்ட்மன் என்பார் படச்சுருள் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தது

94. ஒருமை பன்மை பிழையை நீக்குக:

(அ) மரங்கள் அனைத்தும் வளர்ந்தன (ஆ) மரங்கள் அனைத்தும் வளர்ந்நது

(இ) மரம் அனைத்தும் வளர்ந்தன (ஈ) வளர்ந்து செழித்தது மரங்கள்

95. ஒருமை பன்மை பிழை நீக்கி எழுதுக:

(அ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கியது

(ஆ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கின

(இ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கினர்

(ஈ) காட்டு விலங்குகள் பலவும் வரத் தொடங்கினார்கள்

96. கீழ்க்கண்ட பத்தியைப் படித்து வினாவிற்கான சரியான விடையைத் தேர்ந்தெடு:

முத்துராமலிங்கர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றார். தமது பேச்சாற்றலால் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களிடம் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார். மேடைகளில் அவர் ஆற்றிய வீர உரையைக் கேட்ட மக்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராக வீறு கொண்டு எழுந்தனர். அதனால் அச்சமடைந்த ஆங்கில அரசு பலமுறை அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. மேலும் வாய்ப்பூட்டுச் சட்டம் மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று அவருக்குத் தடை விதித்தது. வட இந்தியாவில் வாய்ப்பூட்டுச் சட்டத்தின்படி பேசத் தடை விதிக்கப்பட்ட தலைவர் பாலகங்காதர திலகர். அவரைப் போலவே தென்னாட்டில் அச்சட்டத்திற்கு ஆட்பட்ட தலைவர் முத்துராமலிங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது விடுதலை வேட்கையை அறிந்த திரு.வி.கலியாணசுந்தரனார் தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியுள்ளார். வங்கச் சிங்கம் என்று போற்றப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்

விடுதலைப் போரில் பங்கேற்றவர்

(அ) கந்தன் (ஆ) முத்து இராமலிங்கர் (இ) நாதன் (ஈ) பாலன்

97. அவர் உரையைக் கேட்ட ஆங்கில அரசு செய்த செயல்

(அ) சிறையில் அடைத்தது (ஆ) பரிசு அளித்தது

(இ) பதக்கம் அளித்தது (ஈ) பாராட்டியது

98. மேடைகளில் அரசியல் பேசக் கூடாது என்று தடை விதிக்கப்பட்ட சட்டம்

(அ) 144 சட்டம் (ஆ) இல்லப்பூட்டுச் சட்டம்

(இ) வாய்ப்பூட்டுச்சட்டம் (ஈ) சொத்துரிமை மறுப்புச் சட்டம்

99. தேசியம் காத்த செம்மல் என்று பாராட்டியவர்?

(அ) திரு.வி.கலியாணசுந்தரனார் (ஆ) பாரதியார்

(இ) சர்.சி.வி.இராமன் (ஈ) பாரதிதாசன்

100. வங்கச் சிங்கம் என்று பாராட்டப்படுபவர்?

(அ) திருப்பூர் குமரன் (ஆ) சுப்ரமணிய சிவா

(இ) திலகர் (ஈ) நேதாஜி சுபாஷ் சந்திரபோசு

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.